யாழ். ESOFT மெட்ரோ கம்பஸில் பட்ட மேற்படிப்பு கற்கைகளை தொடர வாய்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

யாழ். ESOFT மெட்ரோ கம்பஸில் பட்ட மேற்படிப்பு கற்கைகளை தொடர வாய்ப்பு

கடந்த எட்டு வருடங்களாக யாழ் பிராந்தியத்தில் இயங்கி வரும் ESOFT, சில தினங்களுக்கு முன்னர் தனது பட்ட மேற்படிப்பு கற்கைகளை தொடர்வதற்கான பட்டப்படிப்பு பிரிவை திறந்து வைத்திருந்தது. இந்நிகழ்வில் ESOFT மெட்ரோ கம்பஸ் குழும முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. தயான் ராஜபக்ஷ, நிஷான் செம்புசுட்டிஆரச்சி (பிரதம நிறைவேற்று அதிகாரி ESOFT மெட்ரோ கம்பஸ்), ஹர்ஷ ரவீந்திர (உதவி முகாமையாளர் - கிளை செயற்பாடுகள் - ESOFT மெட்ரோ கம்பஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

லன்டன் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து ESOFT மெட்ரோ கம்பஸினால் 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பட்ட மேற்படிப்பு கற்கைகள் வழங்கப்படுகின்றன. தற்போது இந்த கற்கைகள் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் நீடிக்கப்பட்டுள்ளன. இப்புதிய பட்ட மேற்படிப்பு கற்கைகளினூடாக, மாணவர்களுக்கு மென்பொருள் பொறியியலில் BEng (Hons) கற்கை மற்றும் வணிக முகாமைத்துவத்தில் BA (Hons) கற்கை ஆகியவற்றை தமது சொந்த நகரத்திலிருந்தவாறே தொடர முடியும்.

இலங்கையில் இயங்கும் பாரிய தனியார் துறை உயர் கல்விச் சேவைகளை வழங்கும் வலையமைப்பான ESOFT, தன்வசம் 40 நிலையங்களை கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் 30,000 மாணவர்களுக்கு கற்றலைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது முதல், உயர் தரம் வாய்ந்த மற்றும் சகாயமான கற்கைகளை வழங்குகின்றமைக்காக நற்பெயரை கொண்டுள்ளது. சான்றிதழ் கற்கை முதல் பட்டப்பின்படிப்பு வரை கணினி, வணிகம், விருந்தோம்பல், பொறியியல், மொழிப் பயிற்சி மற்றும் பிரத்தியேக மற்றும் நிபுணத்துவ விருத்தி போன்ற பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. ESOFTக்கு உயர்தரம் வாய்ந்த கல்விச் செயற்பாடுகளுக்காக ISO 9001-2008 சர்வதேச சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ESOFT மெட்ரோ கம்பஸுக்கு அண்மையில் Pearson (Edexcel) இனால் பிளாட்டினம் பங்காளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தது.

Comments