VOOC charging வசதியுடன் | தினகரன் வாரமஞ்சரி

VOOC charging வசதியுடன்

OPPO தனது F9 தெரிவை Sunrise Red மற்றும் Twilight Blue ஆகிய நிறங்களிலான அறிமுகத்தைத் தொடர்ந்து, புகழ்பெற்ற Starry Purple வர்ணத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. VOOC Flash Charging வசதியுடன், 5 நிமிடங்கள் சார்ஜ்செய்து 2 மணித்தியாலங்கள் வரை உரையாடக்கூடிய வசதியை கொண்ட F9, துறையின் முதலாவது Gradient வர்ண வடிவமைப்பிலமைந்த தொலைபேசியாகவும் காணப்படுகிறது.

F9 Starry Purple இனால் பிரத்தியேகமான அனுபவம் வழங்கப்படுவதுடன், தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட புத்தாக்க அனுபவமும் வழங்கப்படுகிறது. ரூ. 54,990 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், OPPO F9 Starry Purple ஐ நாடு முழுவதிலும் காணப்படும் அபான்ஸ் காட்சியறைகள், சிங்ஹகிரி, டயலொக் மற்றும் ஏனைய அங்கீகாரம் பெற்ற சகல OPPO விநியோகத்தர்களிடமிருந்தும் கொள்வனவு செய்யலாம். கொள்வனவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உள்நாட்டு சந்தையுடன் ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையிலும் OPPO F9 Starry Purple உடன் 'OPPO Road Show' ஒன்றையும் OPPO ஏற்பாடு செய்திருந்தது.

துறையின் முதலாவது 6.3 அங்குல Waterdrop Screen’ வடிவமைப்பு, 90.8% எனும் உயர் திரை- உடல் கட்டமைப்பு விகிதம், பிரத்தியேகமான gradient வர்ண வடிவமைப்பு மற்றும் 3500 mAh பற்றரி போன்றவற்றைக் கொண்ட OPPO F9 Starry Purple இனால் சிறந்த selfie செயற்பாட்டுக்கு மேலதிகமாக மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.

VOOC Flash Charge தொழில்நுட்பம் OPPO இனால் சுயாதீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த அழுத்த சார்ஜ் தொழில்நுட்பத்தை பிரயோகித்துள்ளதுடன், 5V/1A இல் பொதுவான சார்ஜ் செய்யும் ஆற்றலை விட நான்கு மடங்கு வேகமான சார்ஜ் செய்யும் திறனை கொண்டுள்ளது. VOOC இனால் அடெப்டரிலிருந்து போர்ட்டுக்கான ஐந்து லேயர் மதிநுட்பமான பாதுகாப்பு திறன் சேர்க்கப்பட்டுள்ளது.

Comments