வைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன | தினகரன் வாரமஞ்சரி

வைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன

வைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன Ms. British Empire 2018 பட்டத்தை முடிசூடிக் கொண்ட மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. 2018 செப்டெம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற சர்வதேச அழகுராணிப் போட்டியில் வைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன வெற்றிவாகை சூடியுள்ளார்.

“Ms British Empire 2018 என்ற பெருமதிப்பு மிக்க இந்த மகுடத்தை சூடிக்கொண்டமை எனக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதம் மற்றும் கெளரவம் என்றே உணருகின்றேன். இதன் மூலமாக கிடைக்கப்பெற்ற அனுபவங்களை எனது வாழ்வில் மாபெரும் பொக்கிஷமாக பேணிப் பாதுகாப்பேன். எல்லாவற்றிக்கும் மேலாக கிடைக்கப்பெற்ற அனுபவம் மற்றும் செல்வாக்கு ஆகிய சர்வதேச மேடைகளில் இலங்கையின் பெருமையை நிலைநாட்டியுள்ளதென்றே கருதுகின்றேன். எனக்கு கிடைக்கும் நிதியைக் கொண்டு இலங்கையில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகளை மேம்படுத்த உதவ முடியும். ஆகவே, இந்த இலக்கை அடையப்பெறுவதன் மீது தற்போது கவனம் செலுத்தியுள்ளதுடன், இலங்கைச் சமூகத்தை மேம்படுத்தும் ஏனைய செயற்திட்டங்கள் மீதும் கவனம் செலுத்தவுள்ளேன், என்று வைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன குறிப்பிட்டார்.

மருத்துவத் துறையில் பணியாற்றுவதற்குப் புறம்பாக, 2017 ஆம் ஆண்டு முதல் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் அவர் செயற்பட்டு வருவதுடன், மேல் மாகாணத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கான விளம்பரத் தூதுவராகவும் அவர் செயற்பட்டு வருகின்றார்.

ஆடையணி, அழகு சாதனங்கள் மற்றும் நவநாகரீக வர்த்தகநாமமான Elegant Cleopatra இன் ஸ்தாபகரும் அவரே. அவர் ஒரு திறமையான பாடலாசிரியரும், பாடகரும் கூட. இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதியை திரட்டும் நம்பிக்கையுடன் புற்றுநோய் அறப்பணி மையம் ஒன்றை முன்னெடுக்கும் பணிகளில் தற்சமயம் வைத்தியர் நுவந்திகா ஈடுபட்டுள்ளார்.

Comments