கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த பெரும் கௌரவம்! | தினகரன் வாரமஞ்சரி

கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த பெரும் கௌரவம்!

கீர்த்தி சுரேஷுக்கு தற்போது நல்லகாலம் தான். தமிழ், தெலுங்கு என படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. விக்ரமுக்கு ஜோடியாக சாமி 2 படமும், விஷாலுடன் அவர் நடித்த சண்டகோழி 2 படம் வெளியானது.அடுத்து விஜய்யுடன் அவர் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சர்க்கார் படமும் வரும் தீபாவளி அன்று ரிலீஸாகவுள்ளது. இதனை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.

தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டகோழி 2 படங்கள் சில எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தன. ஆனால் அவருக்கு தமிழ், தெலுங்கில் பிரபல நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான மகாநதி நல்ல வரவேற்பையும், பெற்றுத்தந்தது.

இப்படம் இனி கோவாவில் நடைபெறவுள்ள 49 வது சர்வதேச திரைப்பட விழா Indian Panorama 2018 ல் திரையிடப்படுகிறதாம். தேர்வாகியுள்ள 22 படங்களில் இதுவும் ஒன்று. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

 

Comments