இவ்வாண்டுக்கான ஆசியாவின் மிகச்சிறந்த சந்தைப்படுத்தல் நிறுவனமாக மஞ்சி தெரிவு | தினகரன் வாரமஞ்சரி

இவ்வாண்டுக்கான ஆசியாவின் மிகச்சிறந்த சந்தைப்படுத்தல் நிறுவனமாக மஞ்சி தெரிவு

இலங்கையின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான மஞ்சி பிஸ்கட், சீனாவின் குவான்ஸோ மாகாணத்தில் இடம்பெற்ற Asia Marketing Excellence விருது வழங்கும் விழாவில் 2018 ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் மிகச்சிறந்த சந்தைப்படுத்தல் நிறுவனமாக CBL மகுடம் சூட்டப்பட்டுள்ளது. Asia Marketing Excellence விருதுகள், ஆசியாவின் சந்தைப்படுத்தல் துறையின் முன்னணி கண்காணிப்பு நிறுவனமான Asia Marketing Excellence Federation (AMF)யினால் சந்தைப்படுத்தல் துறையில் ஏனையவர்களைவிட பல மடங்கு முன்னணியில் நிற்கும் நிறுவனங்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் ஒரு விருதாகும்.

இறுதிச்சுற்றுக்கு முன்னர் ஒவ்வொரு நாட்டினதும் தேசிய சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் கடுமையான மதிப்பீடுகளின் மூலம் ஒரு தேசிய வெற்றியாளர் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் இந்த மதிப்பீட்டை மேற்கொண்டது. அது, 2018 ஆம் ஆண்டின் சந்தைப்படுத்தல் 3.0 க்கான தேசிய வெற்றியாளராகவும் 2018 ஆம் ஆண்டின் தேசிய சந்தைப்படுத்தல் கம்பனியாகவும் மஞ்சியை தெரிவு செய்துள்ளது.

16 நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட்டு, கடினமான நேர்காணல் படிமுறைகளின் பின்னர் Asia Marketing Excellence விருதுகளின்போது 2018 ஆம் ஆண்டின் Asia Marketing கம்பனியாக AMF மஞ்சிக்கு விருது வழங்கியது.

1991 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட AMF, முன்னர் Asia Pacific Marketing Federation எனவும், 2007 ஆம் ஆண்டு முதல் Asia Marketing Federation எனவும் அழைக்கப்பட்டது. சந்தைப்படுத்தல் துறையில் AMF மூன்று தசாப்தங்களை அண்மித்த காலமாக, ஆசியாவில் மிகச்சிறந்த பணியை ஆற்றி வந்துள்ளது. ஆசியாக் கண்டத்தின் சந்தைப்படுத்தல் துறையில் சக்திமிக்க நிலையை ஏற்படுத்துவதற்கும் அது நடவடிக்கை மேற்கொண்டது.

Comments