கைவினைஞர்களை தொழில்நுட்ப தொழில் முகவர்களாக்கும் Wurth லங்கா KFW ஜெர்மனி | தினகரன் வாரமஞ்சரி

கைவினைஞர்களை தொழில்நுட்ப தொழில் முகவர்களாக்கும் Wurth லங்கா KFW ஜெர்மனி

Wurth குழுமத்தின் துணை நிறுவனமான Wurth லங்கா இலங்கையிலுள்ள கைவினைஞர்களை திறமை மிகுந்தவர்களாகவும் பொருளாதார சுதந்திரம் மிகுந்தவர்களாகவும் உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்ப தொழில் முனைவர்களாக மாற்றும் வகையில் KFW வங்கியியல் குழுவின் அங்கத்தவரான KFW உடன் இணைந்துள்ளது.

திறமை மிகுந்த கைவினைஞர்களுக்கு கேள்வி நிலவிவருவதுடன் நிர்மாணத்துறையும் எழுச்சிபெற்று வருகிறது. இந்நிலையில் நாடு ஆற்றல்மிகுந்த கைவினைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் திட்டங்கள் தாமதமும் துறையில் கொள்விலையும் அதிகரிப்பதுடன் கடுமையான பிரச்சினைக்கு வித்திடப்படுகிறது. ஏனைய துறைகளிலும் இதே நிலை நீடிக்கின்ற போதிலும் திறமை மிகுந்த கைவினைஞர்கள் பிரதான பங்கு வகிப்பதாக wruth லங்கா நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹன அமிர்தையா தெரிவித்தார்.

இத்திட்டத்தின் இணை ஸ்தாபகர்களான வூர்த் லங்கா மற்றும் KFW DEG ஜெர்மனி ஆகியன உள்நாட்டு கைவினைஞர்களின் ஆற்றலை தரமுயர்த்தவுள்ளன. குறைந்தளவு ஆற்றல் கொண்ட கைவினைஞர்களுக்கு சம்பந்தப்பட்ட வழிகாட்டல்களுடன் கூடிய பாடத்திட்டத்தை வடிவமைத்தல், கைவினைஞர்களுக்கான உள்நாட்டு வருமானத்தை அதிகரித்தல், தொடர்ச்சியான வழிகாட்டல்களை வழங்குதல் ஆகியவற்றினுௗடாக தொழில் முயற்சியாண்மையை ஊக்குவித்தல் மற்றும் வல்லுனர்களின் ஆதரவுடன் கூடிய பொறிமுறைக்கு அடித்தளமிடுவதுடன் நுகர்வோருக்கான தகுதிவாய்ந்த கைவினைஞர்களை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றின் ஊடாக தகைமை வாய்ந்த தொழில்நுட்ப தொழில் முனைவர்களுக்கான அங்கீகாரம் வாய்ந்த முறைமையை ஊக்குவிப்பதுமாகும்.

Comments