பொறுமையும் பெருமையும்! | தினகரன் வாரமஞ்சரி

பொறுமையும் பெருமையும்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இன்று நோயை இல்லாமல் செய்துகொள்வதற்காக எல்லாச் செல்வத்தையும் இழக்கத் தயார் என்கிறார்கள். காலவோட்டத்தின் மாற்றமா, அல்லது மனிதனின் மனச்சிதைவின் தாக்கமா என்று தெரியவில்லை.

மனிதன் சரியான நெறிமுறைகளையும் அறிவுரைகளையும் பின்பற்றினால், சராசரியாக 120 ஆண்டுகள் வாழலாம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. ஆனால், நம்மில் அநேகரு க்கு, நான் எங்கே அவ்வளவு காலம் இருக்கப்போகிறேன் என்ற அவநம்பிக் ைகயே மேலோங்கி நிற்கிறது. நமது நாட்டில் 75 ஆண்டுகள் வாழ்ந்தாலே பெரிய விசயம் என்று அலுத்துக்ெகாள்வார்கள். இருந்தபோதிலும், நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய ஒரு முதியவரைப் பேட்டி எடுத்துப் பிரசுரித்திருந்தோம். வேறு சில பத்திரிகைகளிலும் நீண்ட ஆயுள்கொண்டோரின் வாழ்க்ைகச் சரிதங்கள் வெளிவந்திருக்கின்றன; வெளிவந்துகொண்டிருக்கின்றன.

உலகின் மிகவும் வயது முதிர்ந்த ஜப்பானிய தம்பதியொன்றுக்கு அண்மையில் கின்னஸ் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

1910 ஜூலை 09ஆம் திகதி பிறந்த கணவனுக்கும் 1919 நவம்பர் 24ஆம் திகதி பிறந்த மனைவிக்கும் இந்த விருது, வயது முதிர்ந்து வாழும் தம்பதியர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்றது. கணவருக்கு 108 வயது. மனைவிக்கு 100 வயது. இருவருடைய வயதையும் கூட்டினால் 208 வருடங்கள். ஆனால், வரலாற்றில் ஆகக் கூடிய காலம் வாழ்ந்த தம்பதியர் இவர்களல்லர். நோர்வேயைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் வயதைக் கூட்டினால், 210 ஆண்டுகள்.

ஜப்பானிய தம்பதியினரின் 80 ஆண்டுகால திருமண வாழ்வு 1937ஆம் ஆண்டு ஆரம்பித்தபோதிலும், சில வருடங்களின் பின்னர் அவர் இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் விட்டுவிட்டுப் படைக்குச் சென்ற அவர், இரண்டாம் உலகப்போரின்போது பணியாற்றினார். அவரது மனைவி மியாக்ேகா கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்ைகயில், குழந்தைகளோடு உறவினர்களுடன் வாழ்ந்து வந்தார். அவரது நம்பிக்ைக வீண்போகவில்லை, 1946இல் கணவர் திரும்பி வந்தார். அதன் பின்னர் அவர்களுக்கு மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்கள் தற்போது 77, 75, 71, 68, 66 வயதுகளில் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். மசாஓவும் அவரது மனைவி மியாக்ேகாவும் சுற்றுலா சென்றுகூடத் தமது வாழ்க்ைகயைக் கழித்து வருகின்றனர். அவர்களுடைய நீண்ட ஆயுளுக்கு மசாஓவின் மனவுறுதி மாத்திரமன்றி, அவருடைய மனைவிக்கு 98 வயதாகும் வரை, அவர் தனது கணவருக்குச் சுவையான உணவுகளைச் சமைத்துக்ெகாடுத்து வந்துள்ளார் என்கிறார்கள் பிள்ளைகள்.

ஜப்பானிய சுகாதார அமைச்சின் தகவலின்படி, 100 வயது வரை தமது நாட்டில் மக்கள் வாழ்கின்றார்கள் என்றும் அதிலும் 88% பெண்கள் என்றும் தெரிவிக்கட்டிருக்கிறது. தமது மக்கள் பாரம்பரிய உணவுகளை (மரக்கறி, சோறு, மீன், சோயா) அதிகம் நுகர்வதாகவும் ஜப்பானிய சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தம்பதியர் தற்போது வீட்டில் ஓய்வாக இருந்தாலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கின்றார்கள். இவர்களை இவர்களின் 13 பேரப்பிள்ளைகளும் 26 பூட்டப்பிள்ளைகளும் பராமரித்துக்ெகாள்கிறார்கள். இவர்களின் 80ஆவது திருமண ஆண்டு விழாவின்போது மியாக்ேகா அழகான உடையணிந்து மகிழ்ந்திருக்கின்றார். அவரது வாழ்க்ைகயில் தவறவிட்ட தருணங்களை நனவாக்கிக்ெகாண்டிருக்கிறார். அவர்களது எண்பதாண்டுகால திருமண வாழ்க்ைகயின் இரகசியம் பற்றிக் கேட்டபோது, "என்னுடைய பொறுமைதான்" என்று சிரித்துக்ெகாண்டே கூறுகிறார்.

இந்தப் பொறுமை என்ற ஓர் அம்சம்தான் இன்று நமக்கு குறைந்துகொண்டுபோகிறது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற வாசகத்தையெல்லாம் அந்தக் காலத்திற்குரியது என்றல்லவா ஆக்கிக்ெகாண்டிருக்கின்றோம். ஒரு சில நொடிகள் நமக்கு வீதிச் சமிக்ைஞ யைத் தாங்கிக்ெகாள்ள முடியாது. வங்கிகளில், அலுவலகங்களில் ஓரிரு நிமிடங்கள் வரிசையில் நிற்பதற்குச் சிரமம். இப்படி எதைத் தொட்டாலும் பதற்றம். இந்தப் பதற்றத்தினால், வீணாகச் சுட்டெரிந்துபோவது நம்முடைய இரத்தம் என்று எத்தனை பெரியவர்கள் சொன்னாலும் நாம் கேட்கமாட்டோம். அந்தப் பதற்றத்தால்தான் நமக்கு நோய் வருகிறது என்பதைத் தெரிந்திருந்தும் பதற்றப்படுகிறோம். இப்போது ஜப்பானிய தம்பதியின் எண்பதாண்டுகால திருமண வாழ்வின் வெற்றியின் இரகசியமே பொறுமை எனும்போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது!

ஒரு நாள் புத்த பகவானைச் சந்தித்த ஒருவர், அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டாராம். அதற்குப் புத்தர் எந்தப் பதிலும் பேசவில்லை. மறுநாள் அங்குச் சென்ற அந்த நபர், நேற்று உங்களை நான் கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் பகவானே! என்று மன்னிப்பு கோரியிருக்கின்றார். அதற்குப் புத்தர், "நீர் பேசியது நேற்று அல்லவா! நேற்றைய அந்த மனிதன் இன்று இந்த இடத்தில் இல்லை. எனவே, நேற்றைய விடயத்திற்கு இன்று மன்னிப்பு அவசியம் இல்லை" என்றாராம்.

'பொறுமை' என்று அந்த ஜப்பானிய அம்மா சொன்னதில் எத்தனை அர்த்தங்கள் இருக்கும் என இப்போது எண்ணிப்பாருங்கள்!

Comments