கிறிஸ்மஸை முன்னிட்டு ODEL நிறுவனத்தின் “Retro Glam” பிரகடனம் | தினகரன் வாரமஞ்சரி

கிறிஸ்மஸை முன்னிட்டு ODEL நிறுவனத்தின் “Retro Glam” பிரகடனம்

சந்தோசம் மிக்க நாட்கள் மீண்டும் உங்களை நோக்கி, குஞ்சங்களும், வெள்ளி வட்டுக்களும், மின்மினியும், வசீகரமும் கொண்டுவரும் நாட்கள் அவை. மேலும் நியோன் விளக்குகளையும் கண்ணாடிப் பந்துகளையும் அது சுமந்து வருகின்றது.

 

இப்பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ODEL நிறுவனம் இவ்வனைத்தையும் காட்சிப்படுத்தல் மூலம் உங்களுக்கு வழங்க இருக்கின்றது. இக்கவர்ச்சிமிக்க பண்டிகைக்கால ஏற்பாடு உங்கள் பார்வையை வசீகரித்து காட்சிப் பொருள்களில் உங்களை மூழ்கச் செய்துவிடும்.

ODEL இன் பண்டிகைக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக நடந்த நிகழ்வில் ஒடேல் பி.எல்.ஸி நிறுவனத்தின் தாய் நிறுவனமாகிய Softlogic Holdings PLC நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு குழு பணிப்பாளர், Desiree Karunarathne கருத்துத் தெரிவிக்கையில், எப்போதும் பண்டிகைக்காலம் ஆரம்பிக்கும்போது ஒடேல் தனது வாடிக்கையாளர்களுக்காக அவர்கள் எதிர்பார்க்கும் விந்தைமிகு அனுபவத்தை உறுதிசெய்வதற்காக அசாதாரணமான எல்லைகளை நோக்கி பயணிப்பதாக குறிப்பிட்டார்.

கால ஓட்டத்திற்கும், போக்குகளுக்கும் ஏற்ப பெஷன் உலகின் இயல்பான சுழற்சி தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் (ஒடேல்) நிறுவனம் Retro (ரெட்ரோ) மூலம் இப்பண்டிகைக்காலம் வசீகரிக்கும் ஒரு அனுபவமாக தனது வாடிக்கையாளருக்கு வழங்கும் விதத்தில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. இடைக்காலத்திற்குரிய மயக்கும் எளிமையான அழகியல். ஒடேல் இன் Retro Glam (ரெட்ரோக்லேம்) ஆனது 60, 70 மற்றும் 80ம் ஆண்டிற்குரிய கைவினை, கைப்பணி அலங்காரங்களை உள்ளடக்கிய நவீனமும இடைக்காலமும் கலந்த ஒரு புது அனுபவம். சர்வதேச ஓடுபாதையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் Marni, Giorgio Armani, marc Jacobs, Hasan Hejazi மற்றும் Moschino போன்றவற்றோடு ஒடேல் இல் Retro Glam தொகுதிகள் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை அலங்கரிக்க இருக்கின்றன. இந்நிகழ்வானது அச்செழுமைமிக்க காலத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்,அக்காலபண்டிகைக் கோலம் எவ்வாறு இருந்தது என்பதை உங்கள் கண்முன்னே கொண்டுவரும்.

Comments