oDoc இல் வரையறைகளற்ற இலவச மருத்துவ ஆலோசனைகள் | தினகரன் வாரமஞ்சரி

oDoc இல் வரையறைகளற்ற இலவச மருத்துவ ஆலோசனைகள்

oDoc இல் தற்போது மாதாந்தம் 499 ரூபாய்க்கு தம்மை பதிவு செய்து கொண்டு, நோயாளர்கள், மருத்துவ செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், நீண்ட வரிசைகளில் காத்திருப்பது, கிருமிகள் நிறைந்த காத்திருக்கும் அறைகள் மற்றும் வைத்தியரை சந்திப்பதற்கான அழுத்தங்கள் நிறைந்த பல தடவைகள் பயணம் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள முடியும்.

oDoc என்பது இலங்கையின் முன்னணி ஒன்லைன் மருத்துவ ஆலோசனை கட்டமைப்பாகும். 270 க்கும் அதிகமான அனுபவம் வாய்ந்த இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட பொது வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் இந்த app இல் காணப்படுவதுடன், வீடியோ மூலமான ஆலோசனைகளை வழங்க தயாராகவுள்ளனர். இதனூடாக நோயாளர்களுக்கு அனுபவம் வாய்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளை எப்பகுதியிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக தம் வசம் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இணைய இணைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.

oDoc என்பது நாடளாவிய ரீதியில் 14,000க்கும் அதிகமான பயனாளர்களின் நம்பிக்கையை வென்றது. இந்த app 2017 இல் அறிமுகம் செய்யப்பட்டதுடன், துரித கதியில் பயனாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வளர்ச்சியடைந்தது. oDoc இனால் எளிமையான மற்றும் உயர் வினைத்திறன் வாய்ந்த தீர்வுகள் இலங்கையில் வழங்கப்படுகின்றன. இந்த கட்டமைப்பினுௗடாக பாவனையாளர்களுக்கு பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களுடன் இலகுவான முறையில் இணைப்பை ஏற்படுத்த உதவியாக அமைந்துள்ளதுடன், app ஊடாக வீடியோ மூலமான ஆலோசனைகளையும் பெற முடியும். பாவனையாளர்கள் app ஐ செயற்படுத்தி தமது தேவையை அதில் குறிப்பிட்டு, இலங்கை வைத்திய சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரின் ஆலோசனையை வீடியோ அழைப்பினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

odoc பாவனையாளர்களுக்கு பொது வைத்திய அதிகாரிகள், குழந்தை வைத்திய நிபுணர்கள், சரும நோயியல் நிபுணர்கள், பெண் நோயியல் நிபுணர்கள், உளவியல் விசேட வைத்திய அதிகாரிகள், இருதய சிகிச்சை வைத்தியர்கள், நீரிழிவு முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் 45 விசேட நோய் நிலைகளுடன் தொடர்புடைய வைத்திய நிபுணர்களை இந்த app ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

Comments