Softlogic Delifrance மற்றும் Chef Roth | தினகரன் வாரமஞ்சரி

Softlogic Delifrance மற்றும் Chef Roth

இரண்டு நட்சத்திர தரம் வாய்ந்த Michelin Chef, Michel Roth போன்றவர்களின் உற்பத்திகளை Delifrance மற்றும் Delifrance நிறுவனத்தின் உத்தியோகபுூர்வ துணை நிறுவனமான வரையறுக்கப்பட்ட ஸொப்ட்லொஜிக் ரெஸ்டூரன்ஸ் தனியார் நிறுவனம் என்பன இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கின்றன.

பிரெஞ்ச் வாழ்க்கைமுறையை உள்நாட்டு வாடிக்கையாளர்களிடம் இத்தயாரிப்புக்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. Chef Roth குறுகியகால இலங்கை விஜயத்தின் போது ஊடகவியலாளர்களையும் Delifrance வாடிக்கையாளர்களையும் சந்தித்து தனது சமையல் திறனை நிரூபித்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்.

பாரிஸிலுள்ள Delifrance கூட்டுநிறுவனத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் செயற்பாடுகளுக்கான பிரதான அதிகாரி பப்ரிக் ஹார்லெக்ஸ் கருத்துத் தெரிவிக்கையில் Softlogic மற்றும் Delifrance நிறுவனத்தின் நிபுணத்துவமிக்க அதிகாரிகளின் உதவியோடு இலங்கையில் எமது வளர்ச்சியை உறுதிப்படுத்தமுடியும் என்றார்.

எதிர்வரும் சிலமாதங்களில் கொழும்பில் எமது புதிய நிலையங்கள் காணப்படும். மேலும் எமது விருந்தினர்களுக்கு அதிஉன்னத உணவு மற்றும் குடிபானங்களை புதிதாக திறக்கப்பட இருக்கும் Next Generation நிலையங்கள் மூலம் வழங்கவுள்ளோம் என்றார்.

Chef. Roth இன் இலங்கை விஜயமானது உரிமம் பெற்ற துணை நிறுவனங்களான Softlogic மற்றும் Delifrance என்பவற்றின் சக்திமிக்க உறவை உறுதிப்படுத்துகிறது. அத்தோடு Delifrance நிறுவனமானது இலங்கை சந்தையை தமது தனித்துவமான French Baker’s உணவுப் பொருட்களுக்காக விரிவுபடுத்தக்கூடிய மிகப்பாரிய சந்தையாக பார்க்கின்றது. மிகவேகமாக நகரமயமாக்களுக்கு உற்படுத்தப்பட்டு வரும் நம் நாட்டின் வாடிக்கையாளர்கள் பதிய தனித்துவமான உணவு வகைகளை அனுபவிப்பதற்கு எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் Delifrance நிறுவனமானது France சமையல் மற்றும் Cafe கலாசாரம் என்பவற்றின் மூலம் Colombo பெருநகரத்தின் சந்தையை மிகப்பொருத்தமான முறையில் இலக்கு வைக்கின்றதுஎன Softlogic Holdings PLC நிறுவனத்தின் கூட்டு சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் Desiree Karunarathna குறிப்பிட்டார்கள்.

சர்வதேச மட்டத்தில் French உணவுப் பொருட்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன.

Comments