xகிறிஸ்மஸை முன்னிட்டு ODEL நிறுவனத்தின் “Retro Glam” பிரகடனம் | தினகரன் வாரமஞ்சரி

xகிறிஸ்மஸை முன்னிட்டு ODEL நிறுவனத்தின் “Retro Glam” பிரகடனம்

The Body Shop மற்றும் Cruelty Free International ஆகியன இணைந்து உலக விலங்குகள் தினமான கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி 8.3 மில்லியன் கையொப்பங்களை திரட்டி நியுயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளன. ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய முன்நோக்கி பயணிப்பதற்கு என்பதற்கமைய இந்நடவடிக்கையில் இரு நிறுவனங்களும் தம்மை ஈடுபடுத்தியிருந்தன.

30 வருட காலத்துக்கு மேலாக அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தியின்போது விலங்குகளில் அவை பரிசோதிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சர்வதேச வர்த்தக நாமமான The Body Shop மற்றும் விலங்குகளில் அழகுசாதனப் பொருட்களின் பரிசோதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு குரல் கொடுக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான Cruelty Free International ஆகியவற்றின் அயராத செயற்பாடுகளின் வெளிப்பாடாக இந்த கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த இணைவானது, விலங்குகளில் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி பரிசோதிக்கப்படுவது தவிர்ப்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளதுடன்,

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 12 ஆன பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி மற்றும் இதர முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்தி மற்றும் நுகர்வு பொறிமுறைகளை வியாபாரங்கள் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் குடிமக்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் லீஸ் கிங்கோ இந்த செயற்பாடுகளில் ஐக்கிய நாடுகளின் சார்பாக இணைந்து கொண்டு, வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த செயற்பாடுகளில் எவ்வாறு தமது செயற்பாடுகளில் தமது பங்களிப்பை வெளிப்படுத்த முடியும் என்பது பற்றி உணர்த்தியிருந்தார்.

15 மாத காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் உதவியாளர்களிடமிருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டிருந்ததுடன், ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் விலங்கு வதையை முற்றாக தடை செய்யுமாறு கோருவதற்கான விதிமுறையை வடிவமைப்பதற்கும் அடித்தளமாக அமைந்திருந்தது.

Comments