
சிரேஷ்ட ஊடகவியலாளர் சரத் மலலசேகர தனது 80 ஆவது வயதில் நேற்று காலமானார். ஊடகத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார். டெய்லி நியூஸ், ஒப்சேர்வர் பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றி வந்த மலலசேகர,
பொலிஸ் மற்றும் நீதிமன்ற செய்தி சேகரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். அன்னாரின் பூதவுடல் இன்று, ஞாயிற்றுக்கிழமை பொரல்ல ஐயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இன்று மாலை 4.00 மணிக்கு கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.