வாக்ெகடுப்பு நடத்த சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை | தினகரன் வாரமஞ்சரி

வாக்ெகடுப்பு நடத்த சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை

பாராளுமன்றத்தில் வாக்ெகடுப்பு நடத்துவதற்கு சபாநாயகருக்கு எந்தவித அதிகாரமும் இல்லையென அரசாங்கத்தின் இணைப்பேச்சாளரான கெஹெலிய ரம்புக்ெவல்ல குறிப்பிட்டார். அரச தரப்பினர் பாராளுமன்றை விட்டு வெளிநடப்புச் செய்த பின்னர், தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பில் சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்த இயலாதெனவும் அவர் சொன்னார். நிறைவேற்றதிகாரம் மூலம் பிரதமரும், அரசும், அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கிணங்கச் செயற்படவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய வலியுறுத்தினார்.

கரு ஜயசூரியவே, சபாநாயகராக இருக்கின்றார். ஆனால், அவர் சபாநாயகராகச் செயற்பட்டதில்லை. சபாநாயகர் அதிகாரத்தை தன்கையில் எடுத்துக் கொண்டு பாராளுமன்ற சம்பிரதாயங்கள், நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமாகச் செயற்படுகின்றார்.

அதன் மூலம் நாட்டிலும் குழப்பமான நிலையைத் தோற்றுவித்துள்ளார். இன்று நாடு எதிர்நோக்கும் குழப்பகரமான நிலைக்கு சபாநாயகர் மாத்திரமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் ​ெதரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலை பற்றி மேலும் கருத்து தெரிவித்த அவர், நிறைவேற்றதிகாரம் மூலம் நியமிக்கப்பட்ட அரசானது சட்டவிரோதமானது என ஐக்கிய தேசியக் கட்சி நினைத்தால், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. எவ்வாறிருப்பினும், உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பினை டிசம்பர் 07 ஆம் திகதி வௌியிடவுள்ளது. சபாநாயகர் நியாயமாக செயற்படுபவராக இருப்பின், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளி வரும் வரை பொறுமை காத்திருக்க வேண்டும். மாறாக அவர் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதாலேயே இன்று நாம் இந்த பாரதூரமான நிலைக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.

நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை என்பன தமக்குள் ஒருவித உடன்பாட்டுடனேயே செயற்படுகின்றன. தற்போது நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துக்குமிடையில் முரண்பாடுகள் எழுந்துள்ளதாகத் தோன்றுகின்றது என்றார்.

நவம்பர் 27 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் என்ற சபாநாயகரது அறிவித்தல் பற்றிக் கேட்டபோது, அதுவும் சட்டவிரோதமானதே என்றார் ரம்புக்ெவல்ல.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் மோசடியாக ஆவணங்களைத் தயாரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற, புத்தசாசன, மத விவகாரங்களுக்கான அமைச்சர் உதய கம்மன்பில, விரைவில் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சட்ட நடவடிக்ைக எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

"அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை எனக்கூறிவரும் சபாநாயகர், முறையான நம்பிக்ைகயில்லாப் பிரேரணை கடந்த 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதாக ஒருபோதும் அறிவிக்கவில்லை. பாராளுமன்றத்தில் முறையாக நடைபெற்றிராத விடயமொன்றினை அவர் ஹன்சாட்டிலும் பதிய முடியாது. ஆனால், கடந்த 23ஆம் திகதி உத்தியோகபூர்வ ஹன்சாட்டினை நாம் பார்த்தபோது, 14ஆம் திகதி முறையாக முன்வைக்கப்படாத நம்பிக்ைகயில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் வேண்டுமென்றே சோடித்துச் செய்த பதிவாகவே இதனைக் கருத முடியும். குற்றவியல் தண்டனைக் கோவையின்படி இது குற்றமாகும். இக்குற்றத்திற்கு மூன்றாண்டு சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்" என்று குறிப்பிட்ட அமைச்சர் கம்மன்பில, அவ்வாறு சபாநாயகருக்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுக்கும்போது, பாராளுமன்ற சிறப்புரிமையின் பிரகாரம் அவருக்குச் சட்ட பாதுகாப்பு இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து வருவதாகவும், அதுபற்றி உறுதிபடுத்திக்ெகாண்டதும், குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

பெரும்பான்மையை நிரூபிக்க

பேச்சுகள் ஆரம்பம்

அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த சில தினங்களில் 113 பெரும்பான்மையை நிரூபிக்க இயலுமெனவும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்தார்.

நிலையியற் கட்டளைக்கும் தெரிவுக்குழுவிற்கும் அமைவாகவும் சபை முதல்வரி தயாரிக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவும் சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பட்சத்தில், அரசாங்கம் தமது பெரும்பான்மையை நிரூபிக்க எந்தவேளையும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பின்னர் நிச்சயமாகத் பொதுத்தேர்தலுக்குச் செல்வதாகத் தெரிவித்த அமைச்சர், அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டும் எனவும் தெரிவித்தார்.

நமது நிருபர்

Comments