தவணைக் கொடுப்பனவு வசதியை வழங்கும் அமானா வங்கி | தினகரன் வாரமஞ்சரி

தவணைக் கொடுப்பனவு வசதியை வழங்கும் அமானா வங்கி

வட்டியற்ற வங்கிச் சேவை முறை பொதுமக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துவருவதால், தற்போதைய காணி மற்றும் கட்டட நிர்மான வியாபாரம் அதிகரித்த சூழலில் அமானா வங்கியின் வீடு மற்றும் தொடர்மாடி கட்டட நிதி வசதியை அநேகமானோர் நாடுகின்றனர். வங்கித்துறையில் சிறந்த கட்டணத்துடன் அமானா வங்கி வழங்கும் இந்த நிதித் தீர்வு வாடிக்கையாளர்களுக்கு இலாபகரமானது மாத்திரமன்றி, வழமையான வீடமைப்பு நிதி வசதிகளைவிட மேலான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. சொத்தின் மீதான இலாப நட்டங்களை வங்கி பகிர்ந்துகொள்ளுதல், அத்துடன் மேலதிக கட்டணமின்றி தமது நிதியுதவியை முன்கூட்டியே செலுத்தும் திட்டம் என்பன வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு நன்மைகளுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

அமானா வங்கியின் இத் தனித்துவமான வசதியின் கீழ், வங்கியானது வாடிக்கையாளருடன் கூட்டுச் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்வனவு செய்யும் அல்லது நிர்மாணிக்கும். அதன் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வங்கியின் பங்கைத் தனக்குச் சொந்தமாக வாங்கிக்கொள்ள வாடிக்கையாளருக்கு வாய்ப்பளிக்கப்படும். வங்கியானது வீட்டில் தனக்குள்ள பங்கினை வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடும் என்பதால் வாடிக்கையாளர் ஆரம்பத்திலிருந்தே வீட்டைப் பூரணமாகப் பயன்படுத்தலாம்.

நிதியுதவி அங்கீகாரம் 3 தினங்களுக்குள் வழங்கப்படும் அதேவேளை முதல் 2 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த வாடகை வழங்கும் வசதி 15 ஆண்டு வரை வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் மேலும் நன்மையடையலாம்.

வீடு கட்டுவதற்காக காணியொன்றை வாங்குதல், பூரணமாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டை அல்லது தொடர்மாடி கட்டிடத்தை கொள்வனவு செய்தல், தற்போதுள்ள வீட்டைத் திருத்தியமைத்தல், விரிவுபடுத்துதல் அல்லது வீடொன்றை வாங்குவதற்கு அல்லது கட்டிக்கொள்வதற்கு ஏற்பட்ட செலவை ஈடுசெய்தல் ஆகியவற்றிற்காக நிதி வசதியைப் பெறும் விருப்பத்தேர்வு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் பயனை பெறுவதற்கு, தற்போதுள்ள வீடமைப்பு நிதியுதவி வசதியொன்றை அமானா வங்கிக்கு மாற்றிக்கொள்வதற்கும் இடமளிக்கப்படும்.

Comments