திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால் | தினகரன் வாரமஞ்சரி

திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் - அமலாபால் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வெளியான தகவலுக்கு விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் திடீர் என்று சமூக வலைதளங்களில் விஷ்ணு விஷால் விரைவில் அமலாபாலை திருமணம் செய்ய உள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

விஷ்ணு விஷால்- அமலாபால் திருமணம் என்று பரவிய செய்தி குறித்து விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் “என்ன ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள்” என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

Comments