யுவதியை கடத்த முயன்ற மூன்று இளைஞர்கள் மடக்கிப் பிடிப்பு | தினகரன் வாரமஞ்சரி

யுவதியை கடத்த முயன்ற மூன்று இளைஞர்கள் மடக்கிப் பிடிப்பு

 

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

 

ஆலயத்துக்குச் சென்ற யுவதி ஒருவரை மூன்று இளைஞர்கள் முச்சக்கரவண்டியொன்றில் கடத்த முயற்சித்த சம்பவமொன்று மட்டக்களப்பு, களுதாவளையில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று (01) சனிக்கிழமை காலையில் களுதாவளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,

மட்டக்களப்பு, களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு விரதத்துடன் வந்த போரதீவைச் சேர்ந்த யுவதியொருவரை ஆட்டோவில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து பலவந்தமாக அவரது வாயைப் பொத்தியவாறு ஏற்றிக்கொண்டு முச்சக்கர வண்டியில் வேகமாகத் தப்பிச் சென்றுள்ளனர். இந் நிலையில் இளைஞர்களின் பிடியிலிருந்து தப்புவதற்கு முயற்சி செய்து பலனளிக்காததால் அவர்களது கையை உதறிவிட்டு ஓடும் முச்சக்கரவண்டியிலிருந்தவாறே பலமாக கூச்சலிட்டுள்ளார் அந்தப் பெண்.

கடத்தப்பட்ட யுவதி கூச்சலிட்டு அபயக்குரல் எழுப்பியவாறு முச்சக்கர வண்டியில் பயணித்ததைக் கண்ட பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டு முச்சக்கரவண்டியைப் பின் தொடர்ந்து சென்று இடையில் வழிமறித்து யுவதியைக் காப்பாற்றியுள்ளனர். அத்துடன் யுவதியைக் கடத்திச் சென்ற மூன்று இளைஞர்களையும் மடக்கிப்பிடித்துப் பொலிஸிடம் ஒப்படைத்தனர்.

 

Comments