சுபாவுடன் தலைமறைவாகியதாக பொய் சொன்னார்கள் | தினகரன் வாரமஞ்சரி

சுபாவுடன் தலைமறைவாகியதாக பொய் சொன்னார்கள்

நீதியரசர் வாத்வா தீர்ப்பு

“நளினி அவருக்குப் பணிக்கப்பட்டிருந்த மாதிரியே சுபாவைக் கூட்டிக்கொண்டு குறிப்பிட்ட இடத்திற்குப் போனார். அதன் பிறகு மறைவாக மறைந்து (அதாவது யாரிடமும் பிடிபடாமல் ஒளிந்து கொண்டார்கள்) போனார்கள்.” என்று எழுதியுள்ளார். அப்படியான குறிப்பு சி.பி.ஐயின் ஆவணங்களிலோ, அல்லது சாட்சியங்களிலோ, சான்றுகளிலோ எங்குமே கிடையாது. குண்டு வெடிப்புக்குப் பிறகும் நான் 10.6.91 வரை விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் தவறாமல் அலுவலகம் போய் வந்தேன். இராயப்பேட்டையில் உள்ள அம்மாவின் வீடு, வில்லிவாக்கத்தில் இருந்த வாடகை வீடு என பல இடங்களுக்கும் சென்று வந்தபடிதான் இருந்தேன். இதற்கான சான்றுகளும், சாட்சிகளும் சி.பி.ஐ.யின் ஆவணங்களிலேயே இருக்கின்றது. பிறகு எப்படி நான் சுபாவுடன் தலைமறைவாகியிருந்தேன் என தீர்ப்பில் எழுதப்பட்டிருக்கிறது?

நீதியரசர் வாத்வா,

“அரசு சாட்சி 210 சங்கரி, விடுதலைப் புலிகளின் உறுப்பினர் முத்துராஜாவின் தங்கை, நளினியின் புலிகளுடனான கூட்டுறவுத்தனம் பற்றி சொல்லி இருக்கிறார்” என எழுதியிருக்கிறார்.

முத்துராஜா புலிகள் உறுப்பினர் அல்ல. வெறும் ஆதரவாளரே என்று சி.பி.ஐயின் சாட்சியச் சான்றுகளே கூறுகின்றன. சாட்சிகளும் அப்படித்தான் கூறியிருக்கின்றார்கள். ஏன், தீர்ப்பின் வேறு இடத்தில் இது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தடா நீதிமன்றத் தீர்ப்பும் அவ்வாறே சொல்கிறது. மேலும் இந்த சாட்சியின் போக்கு பிடிக்காமல், சங்கரியின் வீட்டிலிருந்து கிளம்பி பெண்கள் விடுதி ஒன்றில் நான் 23நாட்கள் தங்கினேன் எனவும் உள்ளது.

அப்படி என்றால் அவர்களது உறவு எனக்கு பிடித்திருக்க வில்லை என்றுதானே பொருள். மேலும் இந்த சாட்சி மேற்கொண்டு வேறு ஏதும் சொன்னதாகக் குறிப்புகள் இல்லை. பிறகெப்படி சாட்சியத்தில் இல்லாத வார்த்தை தீர்ப்பில் வருகிறது? காரணம் ஒன்றே! என் கணவருடனான எனது காதலும், கணவன் மனைவி உறவும்தான் இங்கு இப்படித் திரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து தீர்ப்பில்

“அரசு சாட்சியான 107 டாக்சி ஓட்டுநர் இராமசாமி பெயரில் திருப்பதியில் அறை எடுக்கப்பட்டது” என தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் அரசு சாட்சி 107, அதாவது ராமசாமி அவரது சாட்சியத்தில், ‘தான் திருப்பதியில் அறை ஏதும் எடுக்கவில்லை. சிவராசன்தான் அவரது பெயரில் அறை பதிவு செய்திருந்தார் என்று பத்திரிகையில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்’ என கூறியிருக்கிறார்.

இப்படி பல தவறுகள் சேர்ந்து ஒரு தவறான முடிவுக்குக் கொண்டு போயிருக்காது என்று எப்படி நம்ப முடியும்..?

அடுத்து தீர்ப்பு

‘பொட்டம்மான் (குற்றவாளி A3 முருகனிடம்) என் கணவரிடம் ஒரு வேலையைக் கொடுத்து இந்தியா போகும்படி பணித்தார் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் என் கணவர் பெயரில் தயாரித்த வாக்கு மூலத்தில் (அரசு ஆவணம் 81) ‘எனக்கு சென்னை கோட்டை மற்றும் காவல்துறை அலுவலகங்கள், நிலையங்கள் ஆகிய புகைப்படங்களையும், வரைபடங்களையும் சேகரித்து அனுப்பும் வேலையை மட்டும் கொடுத்திருந்தார். அந்த வேலை முடிந்த பிறகு 8.5.91 அன்று இலங்கைக்குத் திரும்பும்படி உத்தரவு வந்ததாகவும், கடற்கரையில் படகு வராததால் திரும்பிப் போக முடியவில்லை’ என்று என் கணவர் சொல்லி இருப்பதாக எழுதப்பட்டுள்ளதே தவிர, ‘முக்கிய வேலை’ என்ற வார்த்தை எங்கும் இல்லை.

படிப்பவர்கள் என் கணவர் ராஜீவ் காந்தி கொலைக்காக வேண்டி பொட்டம்மானால் அனுப்பப்பட்டார் என தவறாக முடிவுக்கு வருவார்கள்தானே.

வாத்வாவின் தீர்ப்பு

“1991 மே மாதம் முதல் வாரத்தில் ‘இரண்டு பெண்களை அழைத்து வந்திருக்கிறேன், அவர்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்க ஒரு இந்தியப் பெண் தேவை’ என A3 முருகனிடம் சிவராசன் சொன்னார்” என்று எழுதப்பட்டுள்ளது.

1991மே முதல் வாரத்தில் இப்படியொரு கருத்துப் பகிர்வு என் கணவருக்கும் சிவராசனுக்கும் நடந்ததாக எங்குமே சான்றுக் குறிப்புகள் இல்லை.

மாறாகக் கணவர் கொடுத்திருந்ததாக எழுதப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தில் “1991 மார்ச் மாதத்தில், எதிர்காலத்தில் நல்லுறவை வளர்க்கத் தலைவர்களுக்கு மாலை அணிவிக்க ஒரு இந்தியப் பெண் தேவை என சிவராசன் கேட்டார்”. என்றும் 1991 ஏப்ரல் முதல் வாரத்தில் “சுபா, தனு என்ற இரு பெண்களை அழைத்துவர இருப்பதாகவும் அவர்களுடன் சென்று வேலையை முடிக்க (இலங்கைப் பெண்கள் எனத் தெரியாமல் இருக்க) ஒரு பெண் தேவைப்பட்டது, அதற்கு நளினியைப் பயன்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது” என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

இந்த ஒரு பகுதியினையும் சேர்த்துப் பார்த்தால் அந்த வேலை “நல்லுறவினை வளர்க்க மாலை அணிவிப்பது” தான் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

மனம் வருந்தி தானாக முன்வந்து கணவர் ஒப்புதல் வாக்குமூலம் தந்தது உண்மையாயின் அந்தப் பகுதி எங்கே? பிறகு எதை வைத்துக் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என வரிக்கு வரி எழுதினார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை.

முதல் பகுதிக்குக் கணவர் “முயற்சி செய்கிறேன்” என்று சொன்னதாக உள்ளது. இரண்டாவது பகுதி “நளினியைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது” என உள்ளது. தீர்மானிக்கப்பட்டது என்றால் யாரால்? என் கணவர்தான் தீர்மானித்தார் என சொல்ல முடியாது. யார் தீர்மானித்தார்கள் என்பதற்கு விளக்கம் இல்லை. இது தொடர்பாக என் கணவர் 7.05.91க்கு பிறகு பேசினார் என்பதற்கு எவ்விதச் சான்றும் எங்கும் இல்லை.

அடுத்து “7.5.91 வரை சிவராசன், சுபா, தனு ஆகிய மூவரைத் தவிர வேறு யாருக்கும் அந்தக் கொலைச் சதித்திட்டம் தெரிந்திருக்கவில்லை” என்று இதே தீர்ப்பில் முன்னால் சில இடங்களில் நீதிபதிகள் சொல்லியிருப்பதை இங்கு இவற்றுடன் இணைத்துப் பாருங்கள்.

அடுத்து மேற்படி இரு பெண்களுக்கும் சுபா, தனு என பெயர் வைக்கப்பட்டது. 2.5.91அன்று சென்னை வந்த பிறகுதான் என சி.பி.ஐ குற்றப்பத்திரிகை சொல்கிறது. அதற்கு முன்னர் அவர்கள் பெயர் நித்தியா, அன்பு என்கிறது சி.பி.ஐ. அப்படி இருக்க 1991 ஏப்ரல் முதல் வாரத்திலேயே அந்த இரு பெயர்களால் குறிப்பிட்டு சிவராசன் சொன்னார் என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? இதை ஏன் நீதிபதிகளிடம் மறைத்தார்கள்?

அடுத்து தீர்ப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பார்த்தாக வேண்டும் பக்கம் 299இல்

‘எந்த ஒரு இடத்திலும் என் கணவருக்கோ, எனக்கோ ஏதேனும் அநீதி, துன்புறுத்தல் (Prejudice) இழைக்கப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின் போது (During the trial priod) புகார் எதுவும் செய்யவில்லை என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் புலன் விசாரணையும் சரி நீதிமன்ற விசாரணையும் சரி முறைகேடுகளின் மொத்த உருவமாகவும் சட்டத்துக்கு புறம்பாகவுமே நடத்தப்பட்டன. சி.பி.ஐயினரின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கொடூரத் தன்மைக்கு பயந்து சுமார் 35 பேர் வரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட எதிரி கோடிக்கரை சண்முகம் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என ஊடகங்களும் எழுதியிருக்கின்றன. நாங்கள் தந்த புகார்களுக்கு சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழு சாட்சியச் சான்றுகள் கூட ஆதாரமாக இருக்கின்றன. சாட்சிகள் பத்ரிநாராயணன், பிரபாகரன், ஆவடி மனோகரன் ஆகியவர்களின் சாட்சியங்கள், குண்டு சாந்தன் எழுதியாகச் சொல்லப்படும் கடிதம் மற்றும் சி.பி.ஐ.யினர் தயாரித்த வயர்லெஸ் செய்திகள் ஆகியவை ஆதாரமாக உள்ளன. பத்திரிகையில் வந்த புகைப்படம், சிறை மருத்துவ அறிக்கைகள் ஆகியன இன்னும் சான்றுகளாக உள்ளன.

அப்படியிருந்தும், எனக்கும் என் கணவருக்கும் ஏற்படுத்தப்பட்ட சித்திரவதை உள்ளிட்ட சட்ட விரோதமான அநீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் அவ்வப்போது ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி எழுத்து மூலமாகவே நீதிமன்றத்தில் புகார் செய்திருக்கின்றோம். அது சம்பந்தமாக விசாரணை, நீதிமன்றம் எடுத்த முடிவுகளின் பதிவாவணங்களும் எங்களிடம் உள்ளது. நானும் என் கணவரும் மட்டுமே சுமார் 500க்கும் மேற்பட்ட புகார் அல்லது எதிர் மனுக்களை அப்படி அனுப்பியிருக்கின்றோம்.”

இவ்வளவு ஆதாரங்கள், இருந்தும் உச்ச நீதிமன்ற நீதிபதி ‘அநீதி ஏற்படுத்தப்பட்டதாக, முறைகேடான விசாரணை நடந்ததக, புகார் ஏதும் செய்யவில்லை’ என்று எழுதியிருக்கிறார் என்றால், அரசுத் தரப்பும், சி.பி.ஐ.யும் சேர்ந்துகொண்டு அப்பட்டமான பொய்களைக் கூறி நீதிபதிகளுக்குத் தவறான தகவல்களை, ஆவணங்களைக் காட்டியிருக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஏனென்றால் விசாரணை நீதிமன்றத்தில் நாங்கள், இறுதியாக எழுத்து மூலம் சமர்ப்பித்த வாதங்களோடும், Cr.P.C 313 பிரிவின் கீழ் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலங்களோடும், அவசியமான அனைத்து புகார் மனுக்களின் நகல்களையும் இணைத்து நாங்கள் சமர்ப்பித்திருக்கின்றோம். ஆனால் இவை எதுவுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்திற்குப் போகவில்லை என்றால், இது ஒரு நேர்மையான விசாரணை முறை என்பதை எப்படி நம்பச் சொல்கிறார்கள்?

அதுமட்டுமல்ல, பக்கம் 356 இல் ஒன்றை எழுதியிருக்கின்றார். ‘அரசு சாட்சி 115 (ரவி), அரசு சாட்சி 132 (சசிகலா) ஆகியோரிடம் நான் (நளினி) ஒப்புதல் வாக்குமூலம் (Ex-tra judicial confession) கொடுத்ததாக எழுதப்பட்டுள்ளது. ஒரு எதிரி அதாவது குற்றவாளியானவர், தனது குற்றத்தை நேரடியாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டு கொடுக்கும் வாக்குமூலம்தான் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் வாக்குமூலம் ஒப்புதல் வாக்குமூலம் ஆகாது என்பது உச்ச நீதிமன்ற வரையறை.

ஆனால் இந்த இரு சாட்சிகளும் என்ன கூறியிருக்கிறார்கள்? “நான் ஒரு இலங்கைத் தமிழரைத் திருமணம் செய்து கொண்டேன். அது மட்டுமே நான் செய்த தவறு. அதனால்தான் அப்பாவியாக இதில் சேர்த்துக் கொண்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ஆகிவிட்டது” என்று சொன்னதாகத்தான் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். அதைத் தவிர வேறெதும் கூறவில்லை. இருவர் சாட்சியமும் எனக்கு சாதகமாகவே உள்ளன. நான் குற்றம் செய்தேன் என சொன்னதாக இவர்கள் சொல்லவே இல்லை. அப்படியிருக்க உச்ச நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் வேறு மாதிரி எழுதியிருக்கிறாரே எப்படி?

நீதியரசர் வாத்வா அவர்கள் பக்கம் 358இல்: “அரசு சாட்சி.77 பத்திரிகையாளர் ஞாநி அந்தப் பொதுக்கூட்ட இடத்தில் சிவராசன் இருந்தது பற்றி சொல்லி இருக்கிறார்” என எழுதப்பட்டுள்ளது.

இதுமாதிரி ஞாநி யின் சாட்சியத்தில் ஏதும் இல்லை. சிவராசன் அறிமுகம் கூட கிடையாது. இது மிக அப்பட்டமான தவறாகும்.

(தொடரும்...)

 

 

 

 

 

 

நீதியரசர் வாத்வா பக்கம் 359இல்

“அரசு சாட்சி பகவான்சிங் பத்திரிகையாளர், ஒரு ‘ஐ விட்னஸ்’ (Eye Witness) எனவும் அவர் சம்பவ இடத்தில் சிவராசன், ஹரிபாபு மற்றும் நளினியைப் பார்த்திருக்கிறார். பின்பு நீதிமன்றத்தில் நளினியை அடையாளம் காட்டினார்’ எனவும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நளினி பற்றி சொல்லி இருப்பது அப்பட்டமான தவறாகும். பகவான்சிங் என்ற அந்த சாட்சி நளினி பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அடையாளம் காட்டவும் இல்லை.

அடுத்ததாக நீதியரசர்கள் தாமஸும், குவார்த்தியும் எழுதிய தீர்ப்புகளை, எங்களின் வாழ்க்கையை முழுதுமாகப் பறித்த, அநீதியான சாட்சியச் சான்றுகளில்லாத, வாக்கு மூலங்களில் இல்லாததை இருப்பதாக எழுதியிருக்கும் அந்தத் தீர்ப்புகளைப் பார்ப்போம்.

நீதியரசர்கள் தாமஸ் மற்றும் குவார்திரி அவர்களின் தீர்ப்பு பக்கம் 11 இல்

“19.5.91அன்று ஸ்ரீ பெரும்புத்தூர் பற்றிய எல்லா விசயங்களையும் சிவராசன் நளினியிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டார்” என எழுதப்பட்டுள்ளது. என்னுடைய வாக்குமூலத்தில், “சிவராசன் ஸ்ரீ பெரும்புதூரைப் பற்றி கேட்டார். எனக்கு அது பற்றி ஏதும் தெரியாதே. வேண்டுமானால் யாரிமாவது விசாரித்துவிட்டுச் சொல்லவா என்று கூறினேன். அதற்கு சிவராசன் வேண்டாம். யாரிடமும் இது பற்றிப் பேசக்கூடாது. நானே விசாரித்துக் கொள்கிறேன் என்று போய்விட்டார்” என்று தான் எழுதப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது எதை வைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்படி எழுதினார்கள்?

நீதியரசர் தாமஸ் மற்றும் குவார்த்ரியின் தீர்ப்பு பக்கம் 12இல்:

“நளினி, முருகன், பேரறிவாளன், அரிபாபு ஆகியோர் 20.5.91 அன்று ஜெயகுமார் (A12) வீட்டில் சிவராசனுடன் கூடிப் பேசினார்கள் என எழுதப்பட்டுள்ளது.

இது உண்மைக்கும் நீதிக்கும் புறம்பான அபத்தம் வடிகட்டிய பொய். அதுவும் அரசு ஆவணம் 77 அதாவது என்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்திற்கும் நேரெதிரானதாகும்.

என் கணவருக்கும், அறிவுக்கும், அரிபாபுவுக்கும், ஜெயகுமார் வீடு தெரியாது, அவரின் வீட்டுக்குப் போனது கூட கிடையாது. என் கணவர், பேரறிவாளனுக்கும், அரிபாபுவுக்கும் அவருடன் அறிமுகம் இருந்தது கிடையாது என்றுதான் என்னுடைய வாக்குமூலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

“20.5.91 மாலை இராயப்பேட்டை வீட்டுக்கு வந்த சிவராசன் என்னிடம் மட்டும் மூன்றே மூன்று வரிகள் இரகசியமாகப் பேசிவிட்டுப் போனதாக” என்னுடைய வாக்குமூலத்தில் எழுதியதைத்தான் தவறான புரிதலோடு தீர்ப்பில் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

நீதியரசர் தாமஸ் மற்றும் குவார்த்தி அவர்களின் தீர்ப்பு பக்கம் 12 இல்: “21.5.91 அன்று என் கணவர் எனக்காகக் காத்துக் கொண்டிருந்ததாகவும், அவரின் பணிப்புரைபடி நான் வில்லிவாக்கம் வீட்டிற்கு விரைந்து போனேன்” எனவும் எழுதப்பட்டுள்ளது.

என் வாக்குமூலத்திலோ அல்லது வேறு எந்த ஆவணங்களிலோ, “என் கணவர் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்” என்ற சான்றுக் குறிப்புகளே இல்லை.

மாறாக, 21ஆம் திகதி அன்று மதிய உணவுக்காக ராயப்பேட்டை வீட்டிற்குச் சென்றபோது அங்கே என் கணவரை நான் சந்தித்ததாகவும், அப்போது சிவராசனின் கோபத்திற்கு ஆட்பட்க்கூடாது என்று எடுத்துச் சொல்லி சீக்கிரம் போகும்படி சொன்னார்” என்றுதான் எழுதப்பட்டுள்ளது. என் கணவருக்கு ஏற்கெனவே கொலைத்திட்டம் பற்றிய தெரிந்திருந்தது எனக் காட்டவும், நான் என் கணவரின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர் எனக் காட்டவும், “waited for”, “instrction” (காத்து இருந்தார். பணிப்புரை) என்று இரு வார்த்தைகளை இடைசெருகி பொருளையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.

நீதியரசர் தாமஸ் மற்றும் குவார்தியின் தீர்ப்பு பக்கம் 13இல்:

“சுபா தனக்கும் தனது கூட்டாளிகளுக்கும் அவர்கள் மேற்கொண்ட செயல்திட்டத்தில் (Mission) முழு மனதுடனான பங்களிப்பினை நளினி வழங்கியதற்காக அவருக்கு நன்றி சொன்னார்” என எழுதப்பட்டுள்ளது.

வழக்கில் இது போல் வார்த்தைப் பரிமாற்றம் அல்லது கருத்துப் பரிமாற்றம் நடந்ததாக எந்தவிதச் சான்றுக் குறிப்பும் இல்லை. பிறகு எந்த அடிப்படையில் நீதிபதி இப்படி நடக்காத ஒன்றை நடந்ததாகவும், சான்று உள்ளதாகவும் முடிவு கொண்டார் என்றும் புரியவில்லை.

நீதியரசர் தாமஸ் மற்றும் குவாத்ரி தீர்ப்பு பக்கம் 57இல்:

“பெண்களை மேடைக்கு அழைத்துப் போகாததற்காக சிவராசன் நளினியைத் திட்டினார்” என எழுதப்பட்டுள்ளது.

7.5.91அன்று வி.பி. சிங்கின் பொதுக்கூட்டம் நடந்து முடிந்து பிறகு, அந்த இடத்தில் நான் பீதியுடன் இருந்ததற்காக என்னைச் சிவராசன் திட்டினார் எனவும் மேடைக்குப் போகாமல் விட்டதற்காக சுபாவையும், தனுவையும் சிவராசன் திட்டினார் எனவும் தான் என்னுடைய வாக்குமூலத்தில் இருக்கிறது. இதைத்தான் தவறாகப் புரிந்துகொண்டு வேறு பொருள்பட தீர்ப்பில் எழுதியிருக்கிறார்கள். நீதியரசர் தாமஸ் மற்றும் குவாத்ரி ஆகியோரின் தீர்ப்பு பக்கம் 57, 58இல்: “அந்தவில் (7.5.91 அன்று, வி.பிசிங்கின் பொதுக் கூட்டம் முடிந்த இந்தச் சமயத்தில் கொலைத் திட்டம் எப்படி நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதனை நான் உணர்ந்திருந்தேன்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டதாக எந்தவித சாட்சியச் சான்றும் அரசுத் தரப்பில் இல்லை. என்னுடைய வாக்குமூலத்தில் ‘அவர்கள் ஒரு உறுதியான செயல்திட்டம் செய்ய இருக்கிறார்கள் என நான் நம்பினேன்’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இதில் ‘கொலைத்திட்டம்’ என்ற வார்த்தையை இடைசெருகிதிரிக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் நான்கு வார்த்தைகளை இடைசெருகி ஒரு நிரபராதியைக் குற்றவாளியாக்கலாம் என நீதிபதிகளே இங்கு நிரூபித்து இருக்கிறார்கள்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே இப்படி இடைச்செருகல் வார்த்தைகளை இருக்கிறதென்றால் எங்களின் ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதிய அரசு சாட்சி 52 தியாகராஜன் எவ்வளவு இடைச் செருகல்களைச் செய்திருப்பார் என்று ஊகிப்பது ஒன்றும் சிரமமன விஷயம் இல்லை. என்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் என்று மட்டுமல்ல, எல்லோருடைய ஒப்புதல் வாக்குமூலங்களிலும் இப்படி ஏராளமான முரண்பாடுகள் இருப்பதற்குக் காரணம் கண்மூடித்தனமாகப் பல இட்டுக்கட்டிய கதைகளோடு அவர்களாகவே எழுதிக்கொண்டதுதான்.

நீதியரசர் தாமஸ் மற்றும் குவாத்ரி அவர்களின் தீர்ப்பு பக்கம் 58இல்

“17.5.91 அன்று ராஜீவ் காந்தியின் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரம் பற்றி

Comments