தவறுகளை ஏற்றுக்ெகாள்ளுங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

தவறுகளை ஏற்றுக்ெகாள்ளுங்கள்!

அணு விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறிய அறிவுரைதான் இன்றைய தலைப்பு. தவறிழைத்துவிட்டோம் என்று உங்கள் மனச்சாட்சி சொல்லுமாக இருந்தால், அந்தத் தவறைச் செய்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள். அஃது உங்களுக்கு விமோசனத்தைத் தரும் என்பதை அனுபவ ரீதியாகக் கண்டறிந்துதான், அவர் அவ்வாறு சொன்னார்.

நம்மில் பலர் நாம் செய்த தவறுகளையெல்லாம் அடுத்தவர்மேல் போட்டுவிட்டுத் தப்பித்துக்ெகாள்ளவே முயற்சிக்கின்றோம். ஒருநாளும் நாம் செய்த தவறை ஒப்புக்ெகாண்டிருக்கிறோமா? என்று கேட்டுப்பார்த்தால்,அநேகருடைய மனச்சாட்சியின் பதில் இல்லை என்றுதான் வரும். இதுதான் உலக நியதி. எனினும், சில நாடுகளில், சில மனிதர்களிடத்தில் தவறுகளை ஏற்றுக்ெகாள்ளும் மனப்பாங்கு இருக்கத்தான் செய்கிறது. ஏற்றுக்ெகாள்வது மாத்திரமன்றி மன்னிப்பும் கோருவார்கள்.

ஆனால், நாம் செய்த ஒரு தவறுக்காக நாம் குற்றஞ்சாட்டப்படும்போது, எடுத்த எடுப்பிலேயே அதனை மறுத்து விடுவோம். மறுதலிப்பதற்கான காரணத்தையும் சொல்வோம். அலுவலகத்திற்கு வர ஏன் தாமதம் என்று கேட்டால், பஸ் கிடைக்கவில்லை என்போம். வாகனத்தில் வந்தால், பழுதடைந்துவிட்டது என்போம். இப்படி எந்தத் தவறையும் ஏற்றுக்ெகாள்ளும் மனப்பாங்கு, எளிதில் நமக்கு வந்துவிடுவதில்லை. அதனால்தான் எவரையும் குற்றஞ்சாட்டாதீர்கள், குறை கூறாதீர்கள் என்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இந்த நடைமுறையைப் பின்பற்றினார் என்றுகூடச் சொல்வார்கள். ஏனெனில், எந்தவொரு மனிதனும் தான் செய்யும் தவறை ஏற்றுக்ெகாள்ளாமல், அவன் தன்பக்க நியாயத்தைச் சொல்லி வாதிடவே முயல்வான். இது கூடாத பழக்கம் என்கிறார் அப்துல் கலாம்.

ஆபிரகாம் லிங்கனின் பாதுகாப்புப் படைத்தளபதி தனக்குத் துரோகமான ஒரு செயலைச் செய்திருந்தும், லிங்கன் அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லையாம். காலப்போக்கில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு லிங்கனால் முடிந்திருக்கிறது. அதனால், குற்றஞ்சாட்டி சாதிக்க முடியாது என்பதை அவர் அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறார்.

ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நம் நாட்டு அரசியல் நமக்குக் கற்றுத்தந்துகொண்டிருக்கும் பாடம் அளப்பரியது. அதனை வாழ்க்ைகயில் மறக்க முடியுமா?

உங்கள் மீதான நியாயமான தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். நிர்வாகம் உங்களிடம் எதிர்பார்ப்பதும் அது தான். ஆனால், தவறுகளை ஒப்புக்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்காதீர்கள். ஒருமுறை நீங்கள் செய்த தவறை எதிர்காலத்தில், நடந்திடவே கூடாது என்பதில் தீர்மான‌மாக இருங்கள். அதேபோல் நீங்கள் காரணமாக இல்லாத தவறுக்கு நீங்கள் குறை கூறப்பட்டால் அதற்கான உரிய விளக்கத்தை சரியான வார்த்தைகளால் கூறி புரிய வையுங்கள் என்கிறார் அப்துல் கலாம்.

விஞ்ஞானி அப்துல் கலாம் தலைமையிலான குழு 1979 ஓகஸ்டில் விண்ணுக்கு அனுப்பிய எஸ்.எல்.வி. ​ெராக்கெட், ரோகிணி என்னும் சிறிய செயற்கைக்கோளைச் சுமந்தபடி வானில் பாய்ந்த சில விநாடிகளில் வெடித்துச் சிதறியது. அப்போது அதன் தோல்விக்கு அப்துல் கலாம் முழுப் பொறுப்பேற்றார். எனினும், அந்தத் தோல்வியைத் தாம் ஏற்பதாக இஸ்ரோ தலைவர் செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார். இஃது அப்துல் கலாமுக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுத்தது. அவர் மனம் துவண்டுவிடவில்லை. 1980 ஜூலையில் எஸ்.எல்.வி. ​ெராக்கெட் விண்ணில் பாய்ந்து ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியது. அதன் மூலம் ​ெராக்கெட் யுகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்தது. அப்போது அந்த வெற்றி பற்றிக் கலாமே செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்க வேண்டும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்திருக்கிறார். தோல்வியை நான் பொறுப்பேற்றேன். அதுபோல், வெற்றிக்குப் பொறுப்பானவர் நீங்கள். நீங்கள்தான் அதனை அறிவிக்க வேண்டும் என்றாராம். அந்தச் சம்பவத்தைத் தன் வாழ்க் ைகயில் மறக்க முடியாது என்று கூறிய கலாம், நீங்கள் செய்யும் தவறுகளை, உங்களால் ஏற்படும் தோல்விகளை ஏற்றுக்ெகாள்ளுங்கள் என்கிறார்.

தவறுகளை ஏற்பதை பற்றி ஓர் அனுபவத்தை அண்மையில் ஃபேஸ்புக் நிறுவனமும் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, இலங்கையில் ஃபேஸ்புக் வாயிலாக இனவாதக் கருத்துகள் பரப்பப்பட்ட போது அதனை நீக்குவதற்குத் தவறிவிட்டோம் என்று அந்நிறுவனத்தின் உப தலைவர் இலண்டனில் தெரிவித்துள்ளார். பொதுவாக எந்த நிறுவனமும் இவ்வாறு தங்களின் தவறுகளை ஏற்றுக்ெகாள்வது கிடையாது. எங்ஙனமாவது அவர்களின் நியாயத்தைத் தர்க்க ரீதியில் முன்வைத்துப் பதில் அளிப்பார்கள். இதனால், முறைப்பாட்டாளருக்கும் அந்த நிறுவனத்திற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு இழுபறிபட்டுக்ெகாண்டிருக்கும். நிறுவனத்திற்கு எதிராக என்றாலும் தனிநபர் மீதானதாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம்.

எனவேதான் தவறு இழைத்தது நான்தான் என்ற ஒரு பக்குவ நிலை நமக்கு ஏற்பட்டுவிட்டால், பிரச்சினைகளைத் தவிர்த்துக்ெகாள்ளவும் நம்மை மேம்படுத்திக்ெகாள்ளவும் வாய்ப்பு ஏற்படும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, உங்கள் தரப்பில் தவறு நேர்ந்திருந்தால், தர்க்கம் புரியாமல் ஏற்றுக்ெகாள்ளுங்கள்! தவறில்லையெனில் புரியவையுங்கள்!

Comments