நிலவே நீ சாட்சி | தினகரன் வாரமஞ்சரி

நிலவே நீ சாட்சி

கடற்கரையில் அமைந்துள்ள இற்றுப்போன அந்த பாழடைந்த வீட்டில்தான் நாங்கள் ஐந்து பேரும் இருந்தோம். அது மிகவும் பாழடைந்த வீடாக தெரிவதற்குக் காரணம் கண்ணுக்கு எட்டிய தொலைவிலே வேறு எந்த வீடும் இல்லாததால் ஆகும். அந்த வீட்டுக்குள் நுழைந்த ஒருவர் உடனடியாக காண்பது உலகின் எல்லை முடிகின்றது போன்ற ஆரம்பமும் முடிவும் இல்லாத மகா ஜல சமுத்திரத்தையே ஆகும். அந்த தொலைநோக்கினால் அவரது எண்ணத்தில் தோன்றுவது பெரிய காட்டிலே தனிமைப்படுத்தப்பட்டவரின் எண்ணத்தில் தோன்றுகின்ற உணர்வை போன்றதொரு உணர்வையே ஆகும்.

நாங்கள் இருந்த பாழடைந்த வீட்டின் கூரையிலிருந்து வானத்திற்கு எழுந்த கால் மைல் மட்டுமே கொண்ட தூரத்தில், வீசி வருகின்ற பாரிய காற்றொன்று கடலில் இருந்து வந்து வீசியது. காற்றில் மிதந்து வந்த மழைத் துளிகள் கதவிலும் சுவர்களிலும் அடிக்கடி மோதியது. இயந்திரம் ஒன்றில் விழுகின்ற கல் மழையொன்றை போன்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது.

எங்கள் ஐந்து பேரில் அன்றிரவு மது அருந்தாதவன் நான் மட்டும்தான். மதுவை மணந்து கூட பார்க்காவிட்டாலும் மாமிசமாகிய பொரிச்ச மாட்டிறைச்சியை சுவைத்துப் பார்க்க என் நாக்குத் தவறவில்லை.

“நாலு பேரும் சேர்ந்து நாலு நிமிசத்தில சாராய போத்தலை குடிச்சு முடிச்சிடுவீங்க போல இருக்கு... குடிப்பதில் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல என்பதைபோல நல்லா குடிக்கிறீங்கள் குடிமகன்களே!” என்று கூறிக் கொண்டு நான் பீங்கானிலிருந்து இன்னுமொரு இறைச்சித் துண்டை எடுத்தேன்.

“குடிக்காமல் இருப்பதற்கும், சேர்த்து இவர் இறைச்சியையே சாப்பிட்டு முடிச்சிடுவாரு போல இருக்கு” என்று கூறிக் கொண்டு செம்சன், எனது கையில் இருந்த மாட்டிறைச்சித் துண்டை பறித்து, அவரது வாயில் திணித்துக் கொண்டார். வெறி வந்த குணதாச “ஆவி, பேய்” என்று கூறி பயம் காட்ட வேண்டும் என்று கூறிக் கொண்டு, எழுந்து நிர்வாணமாக ஆடத் தொடங்கினார்.

அடிக்கடி காற்றில் அசைந்தாடி அணைந்து போன விளக்கை பற்ற வைக்க முயன்ற கரோலிஸுக்கு நான் இவ்வாறு கூறினேன்.

“விளக்கு அணையும் போதெல்லாம் பத்த வைக்க வேண்டாம். குணதாச இருட்டிலேயே ஆடி முடிக்கட்டும்.”

இடி முழக்கத்தில் இடிந்து போயிருந்த பாழடைந்த வீட்டை நோக்கி யாரோ ஓடி வருவதுபோல இருந்தது. இந்த சத்தத்தை கேட்கின்றபோது நாங்கள் பயந்து போனோம். கூரைக்கும் சுவருக்கும் இடைப்பட்ட இறவாணத்தில் சர்ப்பமொன்று நாக்கை நீட்டுவது போல ஒளிர்கின்ற மின்சாரத்தில் எங்களது அறைக்கு அடிக்கடி ஒளிவந்து வந்து சென்றது. நெருப்பு குவியலுக்குள் போடப்பட்ட தென்னை மட்டையொன்று வெடிப்பதைப் போன்ற சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கிய முழக்கத்தின் வெடிப்பு முதலாவது தடவை முற்றுபெற்றது, நிலத்தையும் அந்த பாழடைந்த வீட்டையும் உலுக்கிக் கொண்டே ஆகும்.மேலே தூக்கியெறியப்பட்ட நான் மீண்டும் கதிரையிலேயே விழுந்தேன். கீழே விழுந்த செம்சன், “தீக்குச்சியொன்றை பத்த வை” என்று கத்தினான். “வேணாம்” என்று கிரிஅப்பு மாமா கூறினார்.

ஆடிக் கொண்டிருந்த குணதாச வாங்கின் மேல் அமர்ந்திருந்தது, இரண்டாவது தடவை முழங்கிய இடி மின்னல் முழக்கத்தில் ஆகும். இரண்டாவது தடவை முழங்கிய இடி, முதலாவதாக முழங்கிய இடியைப் போன்று பயங்கரமானதாக இருக்கவில்லை.

கிரிஅப்பு மாமா உறிஞ்சுகின்ற சுருட்டினால் மூலையிலே நெருப்பு வெளிப்படுகின்றபோது மட்டும் அறையில் நிலவிய பாரிய இருட்டின் ஒரு துளி குறைந்தது. இடி முழக்கம் நின்றாலும் மழை நின்றபாடில்லை. கடலும் மழையும் எழுப்புகின்ற கோஷத்தினால் அறையை சூழ்ந்திருந்த இருள் கடுமையாகியதை காணக்கூடியதாக இருந்தது.

“கோமிஸ்ஹாமியை சுட்டவனை இன்னும் பிடிக்க முடியாமல் இல்லை. காசு இருக்கிற எதிரி ஒருத்தன் மனுஷனை சாகடிச்சு இருக்கிறான். கொலை செய்த மனுஷனை எல்லோருக்கும் தெரியும்?” செம்சன் கூறினான்.

“எவ்வளவு பணம் இருந்தாலும் குற்றம் செய்த மனுஷன்; எப்ப சரி மாட்டிக் கொள்வான். இல்லை என்றால் பௌத்த தோத்திரத்தில் கூறியுள்ளது பொய்யாகிவிட வேண்டும்” என்று கிரிஅப்பு மாமா கூறினார்.

“கொலை செய்கின்ற மனுஷன் அகப்பட வேண்டும் என பௌத்த தோத்திரத்தில் சொல்லி இருக்கிறதா?”

“அப்படி சொல்லிருக்காவிட்டாலும் அது அப்படிதான நடக்கும். உலகத்தை பார்க்கின்ற தெய்வங்களின் பார்வை என்ற ஒன்று இருக்கின்றது. அந்த பார்வை இல்லையென்றால் கை கால் பலம் இருக்கின்ற மனுஷனுக்குத்தான் உலகம்.”

”எவ்வளவு பெரிய பொய்” என்று கூறிக் கொண்டு செம்சன் கிண்டலாக சிரிச்சான்.

“பொய்யா” என்று கோபத்தோடு கத்திய கிரிஅப்பு மாமா, மிகவும் வேகமாக சுருட்டை உறிஞ்சினார். சுருட்டின் நுனியில் வெளிப்படுகின்ற மின்மினிப்பூச்சி போன்ற வெளிச்சத்தில், அவரது கீழ் உதட்டையும் மேல் உதட்டையும் மூடியிருந்த கறுப்பு நிற மீசையும் பெரிய துவாரங்கள் இரண்டைக் கொண்ட மூக்கின் நுனியும் அடிக்கடி வெளிச்சம் பெற்றன. கிரிஅப்பு மாமா கதைத்தது, தான் தீவிரமாக நம்புகின்ற கருத்தொன்றை உறுதிப்படுத்த முனைகின்ற குரலில் ஆகும். “சைமன் ஐயாவின் அப்பா பணம் சேர்த்தது பாரிய குற்றங்களை செய்தே ஆகும். 50 வயது பிறப்பதற்கு முன்பே அவரது கண்கள் குருடாகின. அவர் கஷ்டப்பட்டு கொண்டிருந்து செத்தது மாடொன்று போல உயிர் இழுத்துக் கொண்டே ஆகும்.”

கிரிஅப்பு மாமாவின் வாய் கூறிய தர்க்கத்தை கேட்டுக் கொண்டிருந்த செம்சன் இவ்வாறு கூறினார்.

“மனுஷன் எப்போதாவது சாகத்தான் போறான். கை, கால் இல்லாமல் போவது அநியாயம் செய்கின்ற மனுஷன்கள் மட்டுமல்ல”.

“சய்னேரிஸ் வாழ்ந்து கொண்டிருந்தபோது பிராணிகளை கொன்னு சாப்பிட்டார்” என்று கூறிக் கொண்டு கிரிஅப்பு மாமா மீண்டும் தர்க்கம் செய்யத் தொடங்கினார். காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொன்னு வித்து தின்னு குடித்தார். அவர் எப்படி செத்தார்? நோய்வாய்ப்பட்டு துன்பப்பட்டு பன்றியாக கத்திக் கொண்டு உயிர் இழுத்து செத்தார்.”

“அந்த மனுஷனோட கோபித்துக் கொண்டிருந்த பொம்பிளைங்க கட்டின கத இது.”

“பொம்பிளைங்க கட்டின கத? அப்படின்னா பௌத்த தோத்திர புத்தகத்திலும் இருக்கிற கதைகளும் பொம்பிளைங்க கட்டின கதயாகத்தான் இருக்க வேண்டும். சயனேரிஸ் செத்தது சரியா, பௌத்த தோத்திர புத்தகத்தில் குறிப்பிடப்படுகின்ற பன்றிகளை கொன்னு வித்த மனுஷன போல.”

“இந்தக்கத எந்த பௌத்த தர்ம புத்தகத்தில் உள்ளது?” சார்ள்ஸ் கேட்டார்.

“சுத்தர்ம ரத்னாவலிய புத்தகத்தில் இருக்கிற கதையாய் இருக்கும்” என்று நான் கூறினேன்.

“பெலவத்தயில் பெரிய தொர எதிராளியால் கொல்லப்பட்டது இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதாகும். கொலையாளி யார் என்பது ஊர்ல இருக்கிற எல்லோருக்கும் தெரியும். ஆனா அவர் வழக்கில் இருந்து தப்பினார். இப்ப ஓரளவு பணக்காரராகி இருக்கிற அந்த கொலையாளியை ஊர்ல உள்ள பெரிய மனுஷன்களும் மதிக்கிறாங்கள்.”

செம்சன் கூறிய தர்க்கத்தை கேட்டுக் கொண்டிருந்த கிரிஅப்பு மாமா இவ்வாறு கூறினார்.

“அவருக்கு என்ன நடக்கப்போவது என்று பார்க்க,செம்சன் தொர கொஞ்சம் பொறுமையாக இருங்கள், என்றைக்காவது அவருக்கு இதற்கு தண்டனை கிடைத்தே தீரும்.” செம்சன் சிரித்தார்.

“எப்ப சரி அந்த மனுஷன் சாகத்தான் போறான்.”

“அவன் சும்மா சாக மாட்டான். நல்லா அனுபவிச்சுத் தான் சாவான்.”

எனது முகத்துக்கு முன் தலையொன்றோ அல்லது முகமொன்றோ இல்லாத பால் போன்ற பல் வரிசைகளைக் கொண்டதொன்று தோன்றிய உடனேயே மறைந்து விட்டது. மெல்லியதாய் வியர்வை சிந்துவது போன்ற பயமொன்று எனக்குள் ஏறபட்டது. ஆனால் தீக்குச்சியொன்றை பத்த வையுங்கள் என்று யோசனைகூட கூறவில்லை.

“கொலைகார மனுஷனுக்கு என்றைக்கும் தப்பி இருக்க முடியாது” என்று கிரிஅப்பு மாமா வேகமாக கூறினார். மனுஷனகொன்னு கடல்ல தூரத்தில போய் போட்டாலும் கரைக்கு ஒதுங்கும். கொலையாளியை தப்பி இருக்கவிடாத சக்தியொன்று இந்த உலகத்தில இருக்கு. நான் நடந்த உண்மைக்கதை ஒன்றை சொல்லுறேன். அதில் கொலையாளியை தண்டிக்கின்ற சக்தியொன்று இந்த உலகத்தில இருக்கிறது என்பது உறுதியாகும்”.

“அந்த கதையை சொல்லு கிரிஅப்பு மாமா” என்று சின்ன தொர கூறினார்.

கிரிஅப்பு மாமா அந்தக் கதையை சொல்லத் தொடங்கியது, “இது உண்மைக் கதை” என்று ஒரு தடவைக்கு பல தடவை சொல்லி விட்டே ஆகும்.

கீழைத்தேய மனுஷன் ஒருத்தன் அம்பிட்டியவுக்கு சென்று முக்கலானவுக்கு நடுவில் விவசாயம் செய்யத் தொடங்கினான். அந்த காணியில் விவசாயம் செய்கின்ற கிராமத்து விவசாயி ஒருத்தனும் இருந்தான். இவர்கள் ஒரே வயலில் விவசாயம் செய்தது நண்பர்களாக அல்ல பகைவர்களாகவே ஆகும். எனினும் ஒருவன் மற்றவன் அமைக்கின்ற வரப்பை உடைத்து தண்ணீரை வெளியேற்றுவான். மற்றவனும் அப்படியே செய்வான். இவர்களது குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒருவரை ஒருவர் கண்டவுடன் எரிச்சல் படும் அளவுக்கு இவர்களிடையே பகை வளர்ந்திருந்தது. இவர்கள் விவசாயம் செய்தது ஒருவருக்கு ஒருவர் பயந்து கொண்டே ஆகும்.

“அவர்கள் இருவரும் சந்திக்கின்ற போதெல்லாம் ஏசிக் கொண்டது இதனாலாக இருக்கலாம்” கிரிஅப்பு மாமா கூறினார். இருவரின் மனங்களும் குரோதத்தால் கொதித்துக் கொண்டிருந்தன.

நிலவு உதிக்காத ஒரு அமாவாசை இரவில், இந்த கீழைத்தேய விவசாயி வயலுக்கு போனான். வானம் முழுவதும் ஒரே நீல நிறமாகி இருந்தது. வயலின் வரப்புகள் இரண்டுக்கு மத்தியில் உள்ள வயலில் யாரோ இறங்கி நடந்து சென்ற கால் பாதங்களின் அடிச்சுவடுகள் பதிந்து இருந்தன. நிலவொளிபட்டதும் புதர்களின் உச்சி வெள்ளித் தகடுகள் போல் மின்னின. ஆனால் புதர்களின் கீழ் இருள் சூழ்ந்திருந்தது. வயலுக்கு போகும்போது நான் அந்த மனுஷனை கண்டேன். கிராமத்து விவசாயி தனது வரப்பை உடைத்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தான். மனுஷனின் மனதில் முட்டி மோதி வளர்ந்து கொண்டிருந்த குரோதம் நெஞ்சி வெடித்து வெளிவரும் விதத்தில் அதிகரித்து இருந்தது. அந்த மனுஷன் தனக்கு பின்னால் உள்ள அந்த விவசாயி திரும்பி பின்னுக்கு பார்க்கும் போதே தனது கையிலிருந்த மண்வெட்டியை கைகளால் தூக்கி ஓங்கி ஒரு அடி அடித்தான்.

நாங்கள் இருந்த பாழடைந்த வீட்டின் கதவை யாரோ வறண்டுகின்றபோது கேட்கின்ற சத்தத்தை போன்றதொரு சத்தம் கேட்டதும் சின்ன தொரை இருட்டிலேயே போய் கதவை திறந்து பார்த்தார். எனது உடல் விறைத்து போகின்ற அளவுக்கு குளிர் காற்றுடனான மலையையொத்த காற்றலையொன்று கதவினுள் புகுந்தது.

“சின்ன தொர கதவை சாத்துங்கள்” நான் கூறினேன்.

“யாரையும் காணவில்லை” என்று கூறிக் கொண்டு சின்ன தொர கதவை சாத்திவிட்டு இருட்டில் தடவித் தடவி வந்து தமது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

“கிராமத்து விவசாயி, அந்த அடியை தாங்கிக் கொண்டு விழுந்தது, சந்திரக் கடவுளாவது இந்த குற்றத்திற்கு சாட்சி சொல்லுவார்” என்று முணுமுணுத்துக் கொண்டே ஆகும். “ம்” என்று கிரிஅப்பு மாமா மீண்டும் கதையை கூறத் தொடங்கினார். “அந்த மனுஷன் அந்த மண்வெட்டியாலேயே குழியைத் தோண்டி கிராமத்து மனுஷனின் சடலத்தை புதைத்து விட்டு ஒரு வாரத்திற்குப் பின் அந்த கிராமத்தை விட்டு விட்டு வேறு ஒரு ஊருக்குப் போனான்.

“அந்த மனுஷன் கிட்ட அடிபட்டவனை புதைச்சது உயிரோட இருக்காதா” என்று கேட்டேன்.

“அப்படி இருக்க முடியாது. வேறு ஊருக்குப் போய் வசித்த அந்த மனுஷன் பல மாதங்களுக்குப் பின் முற்றத்தில் இருக்கின்றபோது திடீரென தற்செயலாக மேலே பார்த்தார். மேலே பார்த்ததும் அந்த மனுஷன் சிரிச்சான். அன்று பால் போன்ற முழு நிலவு தோன்றி இருந்த நாள். “மேலே பார்த்து இவ்வளவு சத்தமாக ஏன் சிரிச்சீங்க” என்று அவன் மனைவி கேட்டாள். இவன் சொல்லவில்லை. அவள் விட்டபாடில்லை, மீண்டும் மீண்டும் கேட்டாள். பொம்பளைங்க மாதிரி தெரியும் தானே! சந்தேகப்பட்டால் அவங்க மனுஷனை வதைத்து சரி விசயத்தை கேட்டுக் கொள்வாங்கள்.

கதவை வறண்டுகின்ற சத்தம் மீண்டும் கேட்டது. இந்தத் தடவை நான் எழுந்து சென்று கதவின் ஒரு பாதியை திறந்து வெளியில் தலையை போட்டுப் பார்த்தேன். காற்றும் மழையும் நின்றிருந்தாலும் வீடும் சுற்றுப்புறமும் இருளில் மூழ்கி இருந்தது. யாரையும் காணவில்லை என்பதால் நான் கதவை மூடி விட்டு தட்டுத் தடுமாறி தடவிக் கொண்டு கதவுக்கு அருகிலிருந்த எனது ஆசனத்தை தேடிக் கண்டுபிடித்து அதில் அமர்ந்து கொண்டேன். அமர்ந்த உடனேயே முழங்காலுக்கு கீழே குளிரான ஒன்று சுருண்டு கொண்டு சென்றதை உணர்ந்தேன்.

“என்ன இது?” என்று கத்திக் கொண்டு நான் எழுந்தேன். எனது சாரத்தின் ஓரிடத்தில் ஏதோ காலில் ஒட்டிக் கொண்டு இருந்தது. நான் இருட்டிலேயே குனிந்து தடவிப் பார்த்தேன். நனைந்த துணியை தடவிப் பார்த்தது போல எனது கை நனைந்திருந்தது.

“என்ன இது” என்று கூறிக்கொண்டு சார்ள்ஸ் தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குப் பாய்ந்தார்.

“தீக்குச்சியொன்றை அடித்து விளக்கைப் பத்த வையுங்கள்” என்று நான் சின்ன தொரைக்கு கூறினேன்.

“தீப்பெட்டி எங்கே” என்று நான் கேட்க, சின்ன தொரை தடவிப் பார்க்கத் தொடங்கினார். திடீரென எங்களுக்கு அருகில் “கட்ஸ்” என்ற சத்தம் ஒன்று கேட்டது. எங்களுக்கு அருகில் ஒலித்த “கட்ஸ்” என்ற சத்தத்தைக் கேட்டு நான் மட்டு மல்ல பயமற்றவன் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்ற சின்ன தொரையே பயந்து விட்டார்.

“எங்க மனுஷன் தீப்பெட்டி” என்று கூறிக் கொண்டு குணதாச அதட்டினார். எனது உடலில் உள்ள இரத்தம் கொதித்து விட்டது.

சின்ன தொரை தீப்பெட்டியைத் தேடியெடுத்து தீக்குச்சியை அடித்து லாம்பை பற்ற வைத்தார்.

“இந்தப் பரையன் எங்கே இருந்து நுழைந்தான்” என்று கூறிக் கொண்டு சின்னதொரை காலைத் தூக்கினார்.

நீரில் முக்கியெடுத்தது போல நனைந்திருந்த அது காலுக்கு இடையில் சுருண்டு தலையைக் குனிந்து கொண்டு மிகவும் பயத்துடன் இரண்டு கதவுகளுக்கு இடையில் ஊர்ந்து சென்றது. முன்பொரு முறை சின்ன தொரை தடியால் அடித்ததையும் காலால் உதைத்ததையும் பட்டுக் கொண்டிருந்த அது, அவருடைய பெயரைக் கேட்டாலே பயப்படத் தொடங்கியது.

அப்படிப்பட்ட அது வீட்டுக்குள் நுழைந்தது எப்படி என்பதே குணதாசவின் புதுமைக்கான காரணமாகும். சின்னதுரை இருக்கும்போது அது இந்த அறைக்குள் வந்தது புதுமையாகத்தான் இருந்தது.

“நல்ல பசி எடுத்துத்தான் அது வீட்டுக்குள் வந்திருக்கு பொரித்த இறைச்சியின் வாசனையை உணர்ந்து அது கதவை வறண்டி இருக்கு” என்று நான் கூறினேன்.

சின்னதொரையின் வாசனைப் பட்டவுடன் அது பயத்தில் மூலையில் சுருண்டு இருக்கலாம்.”

“அந்த நாய் நுழைந்தவுடன் சார்ள்ஸின் கதிரைக்கு அருகில் இருந்த ஆறிய இறைச்சி முள்ளை பொறிக்கி கடித்து இருக்கு”, “சரி கிரிஅப்பு மாமா அந்த பொம்பல அந்த மனுஷன் சிரிச்ச காரணத்தை கேட்டுக் கொண்டாளா?”

“ஆமா” கிரிஅப்பு மாமா பதில் அளித்தார்.

“அவள் மீண்டும் மீண்டும் கேட்டாள். ஆனால் அவர் “சும்மா சிரிச்சேன்” என்றார். அவர் சிரிச்சது தனக்குத் தான் என்று நினைச்ச அந்த பொம்பளைக்குள் மனசுக்குள் பெரிய கோபமும் பொறாமையும் ஏற்பட்டது.

“ஏன் சிரிச்ச” என்று கேட்டுக் கொண்டு அந்த பொம்பல தனது புருஷனை வதைக்கத் தொடங்கினாள். ஒருநாள் ராத்திரி மனுஷன் நல்ல தின்னு குடிச்சு சந்தோஷமாக கயிற்றுக் கட்டிலில் சாய்ந்திருந்தபோது அந்த பொம்பல அந்த மனுஷன் அருகில் அமர்ந்து கொஞ்சிக் குலாவத் தொடங்கினாள். அன்று அவள், அவன் சிரிச்சது ஏன் என்று அறிந்து கொண்டாள். நிலவு தோன்றாத நாளொன்றில் மண்வெட்டியில் அடித்த விதத்தையும் அந்த மண்வெட்டி அடி பட்டு; அவன் விழுந்த விதத்தையும் அவன் நிலவை ஏசுன விதத்தையும் அந்த மனுஷன் விளாவாரியாக விளங்கப்படுத்தினான். “எனக்கு சிரிப்பு வந்தது, நிலவு சாட்சி சொல்லாததாலாகும்” என்று அவர் இறுதியில் தனது மனைவி கேட்ட கேள்விக்கு பதிலாகக் கூறினான்.

“அந்த பொம்பளைக்கு கள்ள புருஷன் ஒருத்தன் இருந்தான்”. கிரிஅப்பு மாமா தனது கதையின் முடிவை கூறத் தொடங்கினான். அது பத்தி தெரிந்து கொண்ட கொலையாளி ஒருநாள் அந்த பொம்பளைய நல்லா அடிச்சான். அந்த மனுஷன் அடிச்சத பொறுத்துக் கொள்ள முடியாத அந்தப் பொம்பள ஏசத் தொடங்கினாள்.

“வயலில் மனுஷனை கொன்று புதைச்சது போல என்னையும் கொல்லப் போறான்” என்று கூவிக் கூறினாள். இந்தக் கதை வாய்க்கு வாய் போனது. இதை கேள்விப்பட்ட பொலிஸார் பரிசீலனை செய்து கொலையாளியை சிறைப்படுத்தினார்கள்.

வயலை தோண்டி எலும்புக் கூட்டை வெளியில் எடுத்தார்கள். பிறகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து கொலையாளியை குற்றவாளியாக்கினார்கள்.

“இதில்எப்படி கொலையாளியை தண்டிக்கின்ற சக்தி உலகத்தில் இருப்பது உறுதியாகிறது” என்று செம்சன் கேட்டார்.

“அந்த சக்தி இருப்பதால்தான் ஒருநாள் நிலவு உதித்ததை பார்த்தவுடன் அந்த மனுஷனுக்கு சிரிப்பு வந்தீச்சி”.

மழை நின்று விட்டதால், நிலவு மறைகின்ற சோகத்தில் மூழ்கியிருக்கின்ற பெண்ணொன்று உதிக்கின்ற சுகந்தத்தை போல கடல் எழுப்புகின்ற அலையோசை பாழடைந்த வீட்டிலிருந்த எங்களுக்கு நன்றாக கேட்டது. முறிந்து விழுகின்ற ஒன்று அலை ஊடாக ஓடுகின்ற ஒலி எங்களுக்கு பாரிய பிராணியொன்றின் முதுகில் படுகின்ற ஆயிரமாயிரம் கசையடிகளையே ஞாபகப்படுத்தியது. குழியில் எலிகள் போராடுகின்ற சத்தத்தைக் கேட்டு மேலே பார்த்த எனக்கு ரீப்பகளுக்கும் ஓடுகளுக்கும் இடையில் ஓடுகின்ற எலியின் வெள்ளை நிற வயிற்றுப் பகுதி தெரிந்தது.

Comments