Arimac Digital அறிமுகப்படுத்தும் WynkAR தளமேடை | தினகரன் வாரமஞ்சரி

Arimac Digital அறிமுகப்படுத்தும் WynkAR தளமேடை

விளம்பரம் மற்றும் டிஜிட்டல் தொடர்பாடல்கள் தொழிற்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, மரபுரீதியான (offline) மற்றும் இணையத்தின் மூலமான (online) விளம்பரப்படுத்தலுக்கிடையில் மெல்லிய ஒரு இணைப்பாக, ஸ்மார்ட்போன்களில் கிடைக்கப்பெறுகின்ற, நாட்டின் முதலாவது மற்றும் ஒரேயொரு augmented reality platform தோற்ற பெரிதாக்க தொழில்நுட்ப தளமேடையான WynkAR இனை Arimac Digital அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தளமேடையானது, பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட்போன் கேமராக்களின் மூலமாக எழுத்து மற்றும் டிஜிட்டல் கிராபிக்ஸ் அம்சங்களை மேம்பட்ட மெய்நிகர் தோற்றங்களாக பார்ப்பதற்கு இடமளிக்கும்.

நிறுவனத்தின் இத்தளமேடையானது Android மற்றும் iOS (Apple) ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கப்பெறுவதுடன், வர்த்தக நிறுவனங்கள் தமது சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர மூலோபாயங்கள் தொடர்பில் முற்றிலும் மறு கண்டுபிடிப்பில் ஈடுபட்டு, புதுப்பித்து மற்றும் புதிய தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்கின்றது. விளம்பர பிரச்சார இலக்குகள் மற்றும் ஆழமான அனுபவங்களை வழங்கி, பாரம்பரிய விளம்பரப்படுத்தல் முறைமைகளுக்கு மீள் வரைவிலக்கணம் வகுப்பதற்கு WynkAR வர்த்தக நிறுவனங்களுக்கு இடமளிக்கின்றது.

உள்ளடக்கங்களைத் தோற்றுவிப்பவர்களுக்கு தமக்கு வேண்டிய வாசகர்களுடன் மிகவும் பிரத்தியேகமான வழிமுறையில் ஈடுபாடுகளை ஏற்படுத்தும் களத்தை WynkAR அமைத்துத் தருகின்றது. வாசகர்கள் தற்போது தமது Android மற்றும் iOS கைத்தொலைபேசி சாதனங்களைப் பயன்படுத்தி, பாரம்பரியமான பத்திரிகை விளம்பரங்களை ஸ்கான் செய்து, மிகச் சிறப்பான ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் வகையில் டிஜிட்டல் உள்ளடக்கத்தைத் தோற்றுவிக்க முடியும். விளம்பர முகவர் நிறுவனங்கள், வர்த்தகநாமங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிறுவனங்கள் தற்போது இத்தளமேடையைப் பயன்படுத்தி தமது உற்பத்திகள், சேவைகள் அல்லது சம்பவங்களை “பெரிதாக்கும்”வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வரவேற்கப்படுகின்றனர்.

Comments