HUAWEI அறிமுகப்படுத்தியுள்ள Y-Max ஸ்மார்ட்போன் | தினகரன் வாரமஞ்சரி

HUAWEI அறிமுகப்படுத்தியுள்ள Y-Max ஸ்மார்ட்போன்

அதிநவீன HUAWEI Y-Max ஸ்மார்ட்போன் அண்மையில் BMICH இல் நடைபெற்ற Singer Lifestyle Festival நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Huawei Consumer Business Group இலங்கைக்கான தலைமை அதிகாரி பீட்டர் லியூ, Huawei Consumer Business Group இன் பொது முகாமையாளர் கல்ப பெரேரா, சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் விஜேவர்த்தன, சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் குமார் சமரசிங்க, டிஜிட்டல் ஊடகப் பணிப்பாளர் ஜெகத் பெரேரா, சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தில் Huawei வர்த்தகநாம முகாமையாளர் பசிந்து டி சில்வா மற்றும் பிரபல இலங்கை நடிகை தினாக்ஷி பிரியசாத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

“Big Screen, Big World” எனும் தொனிப்பொருளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்தொலைபேசியானது 7.12 Super Large Dewdrop Fullview Display முகத்திரை, Dolby Atmos Sound தொனி, வலுவான சக்தி (Powerful Energy) மற்றும் பாவனையாளர்களின் வாழ்வை வளப்படுத்துகின்ற ஸ்மார்ட் தொழில்நுட்பம் என பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த Huawei Device Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி பீட்டர் லியூ, HUAWEI யைப் பொறுத்தவரையில் 2018 ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளதுடன், இவ்வாண்டில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த ஸ்மார்ட்போன்கள் பலவற்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இவை பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளதுடன், இலங்கையில் ஸ்மார்ட்போன்களை வழங்குவதில் முதலிடத்தில் திகழும் நிறுவனம் என்ற எமது ஸ்தானத்தை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவில் பிரபலமான மற்றுமொரு ஸ்மார்ட்போன் வடிவமான Huawei Y-Max இனை இலங்கையில் அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் பெருமிதமடைவதுடன் நவீன தொழில்நுட்பத்தை இன்னும் அதிக எண்ணிக்கையிலான பாவனையாளர்களுக்கு வழங்கும் என நாம் நம்புகின்றோம் என்றார்.

Huawei Y-Max கொண்டுள்ள அதிசிறந்த fullview HD display ஸ்மார்ட் முகத்திரையானது, எடுத்துச் செல்வதற்கு மிகவும் செளகரியமான ஒரு சாதனமாக, அதன் செளகரியம், மெல்லிய தோற்றம் மற்றும் இலேசான எடை ஆகியவற்றின் பலனாக விபரங்களை விரிவாகத் தரும் வகையில் 90 வீதத்திற்கும் மேலான முகத்திரை விகிதத்தைக் கொண்டுள்ளமையை சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments