SLIIT 2018/19 புதிய மாணவர் சேர்ப்பு வைபவ ரீதியாக முன்னெடுப்பு | தினகரன் வாரமஞ்சரி

SLIIT 2018/19 புதிய மாணவர் சேர்ப்பு வைபவ ரீதியாக முன்னெடுப்பு

பட்டக்கற்கைகளை வழங்கும் கல்வியகமாகத் திகழும் SLIIT, 2018/19 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்ப்பு நிகழ்வை மாலபேயிலுள்ள SLIITஇன் பிரதான கேட்போர் கூடத்தில் வைபவ ரீதியாக முன்னெடுத்திருந்தது. இதன்போது 800 மாணவர்கள் புதிதாக கல்வியகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இந்நிகழ்வில் வேந்தர், உப வேந்தர், பீடாதிபதிகள், பணிப்பாளர்கள் மற்றும் கல்விசார் நிர்வாக ஊழியர்கள் மற்றும் புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் பிரதான அம்சங்களாக மங்கள விளக்கேற்றல், வேந்தர் பேராசிரியர் லகஷ்மன் ரத்நாயக்க மற்றும் உப வேந்தர் பேராசிரியர் லலித் கமகே மற்றும் கல்வி விவகார பணிப்பாளர் யசஸ் மல்லவாரச்சி ஆகியோரின் வரவேற்புரைகளுடன், வெவ்வேறு பீடங்களின் பீடாதிபதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பேராசிரியர் லகஷ்மன் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், சகல மாணவர்களையும் SLIIT க்கு வரவேற்பதுடன், அவர்களுக்கு காணப்படும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும், கல்வி நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து எதிர்கால இலக்குகளை எய்துவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

கடந்த காலங்களில் தனது கல்விசார் நெறிகளை விஸ்தரித்திருந்ததுடன், நாட்டில் காணப்படும் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கெளரவிக்கப்படுகிறது. கணினி, வணிகம், பொறியியல் மற்றும் மனிதநேய மற்றும் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச வழிகாட்டல் நிகழ்ச்சிகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பேராசிரியர் லலித் கமகே, அனைத்து புதிய மாணவர்களையும் வரவேற்பதுடன், எம்மிடம் காணப்படும் உயர் கல்வி வாய்ப்புகள், ஆழமான அறிவு மற்றும் சிறந்த போதனா வழிகாட்டல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மாணவர்கள் தமது கல்வி வருட பூர்த்தியைத் தொடர்ந்து, எதிர்கால தொழில் வாழ்க்கைக்கான சிறந்த அடித்தளத்தை கொண்டிருப்பார்கள் என்றார்.

Comments