ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“எயிட்ஸ் தினம் எப்ப என்டு உனக்குத் தெரியுமோ?”

“ரெண்டு கிழமைக்கு முன்னாலதான் பேசினமென்ன.”

“ரெண்டு கிழமைக்கு முன்ன பேசினமோ,”

“உந்ந நோய்க்கு மருந்து கண்டு பிடிச்சிருக்கினம் என்டு சொன்னியள்.”

“ஓமோம் சொன்னனாங்கள்தான். மறந்து போட்டுது.”

“அண்ண உங்களுக்கு வயசு போட்டுது. அதான் உப்படி மறக்கிறியள்.”

“ஓமப்பா 60 வயசு ஆகுதென்ன.”

“உங்களுக்கு 60 எனக்கு 52 ஆகுது.”

“அது சரி எயிட்ஸ் தினம் எப்ப என்டு தெரியுமோ?”

“உது தெரியாதண்ணே.”

“ஒவ்வொரு வருசமும் டிசம்பர் ஒன்டாம் திகதி எயிட்ஸ் தினம். எயிட்ஸ் நோயைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துற தினம்.”

“இலங்கையிலயும் உதை அனுஸ்டிப்பினமே.”

“இலங்கையில மட்டுமில்ல உலகம் முழுக்க அனுஸ்டிப்பினம். இலங்கையில இந்த வருசத்தில ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரையில 307 எச்.ஐ.வி காவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கினம்.”

“எச்சிக்காவியளோ உவை எங்க இங்க வந்தவை?”

“எச்சிக் காவியள் இல்லயப்பா. ஏச்.ஐ.வி காவியள். உதை உனக்கு விளங்கப்படுத்தவேணும. இல்லயென்டா உனக்கு விளங்காது, எயிட்ஸ் என்டது முழு அளவிலான நோய். ஏச்.ஐ.வி என்டது உந்த நோயை உண்டாக்கிற வைரஸ் கிருமி. உந்தக் கிருமி உடலில புகுந்தவைய சிரமத்தோட குணப்படுத்த முடியும். ஆனா உது ஒருத்தருடைய உடம்பில எயிட்ஸ் நோய ஏற்படுத்திட்டுது என்டா ஆளை காப்பாத்துறது கொஞ்சம் கஸ்டம். இப்ப வியங்குதோ இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்,

“உப்பிடியென்டா உந்த காவியளை கட்டுப்படுத்தினமென்டா நோய் வராது என்ன.”

“சரிதான் ஆனா உந்த காவியளுக்கு நோய மத்தவைக்கு பரப்ப முடியும் என்டதுதான் ஆபத்தான விடயம்.”

“உவை பரப்புவினமே,”

“உதிலிருந்து தப்புறதுக்குத்தான் விழிப்புணர்வு தேவை. ஏனென்டா போன வருசம் இலங்கையில 285 பேர் எச்.ஐ.வியால பீடிக்கப்பட்டிருந்தவை இந்த வருசம் உது 307 ஆக கூடிட்டுது.”

“உந்தக் காவியள் எத்தின பேர் இருப்பினம்?”

“எச்.ஐ.வி. காவியள் 3500 க்கும் 4200 க்கும் இடையில இருக்கினம் என்டு மதிப்பிட்டிருக்கினம். ஓவ்வொரு வாரமும் 5,6 எச்.ஐ.வி. காவியள் கண்டு பிடிக்கப்படுகினம்.”

“உது எப்பிடியண்ணபரவுது?”

“எச்.ஐ.வி. காவியா இருக்கிற ஒருவரோட முறையற்ற இல்லயென்டா பாதுகாப்பில்லாத உடலுறவு வச்சுக்கொண்டா உது மத்தவருக்கு தொத்திக்கொள்ளும். உது இல்லாம காவி ஒருவரிட்ட இரத்தத்தை வாங்கி நல்லா இருக்கிறவைக்கு செலுத்தினா அவைக்கும் உது தொத்திக்கொள்ளும். காவி ஒருவரிட்ட இருந்து இரத்தம் எடுக்க இல்லயென்டா பச்சை குத்த பயன்படுத்துற ஊசிய நல்ல நிலையில இருக்கிற ஒருவர் பாவிச்சாலும் பிரச்சினைதான்.”

“அண்ண இலங்கையில இப்பிடியென்டா மத்த நாடுகளில?”

“ போன வருசத்தின்ட கணக்கின்ட படி இந்தியாவில 21 லட்சம் பேர் எச்.ஐ.வி யோட வாழ்ந்து கொண்டிருக்கினம். உலகத்தில அதிக எச்.ஐ.வி காவிகள் வசிக்கின்ற மூன்டாவது நாடு இந்தியாதான். உது மட்டுமில்ல வருடாந்தம் 88 ஆயிரம் பேர் புதுசா எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகினம். 69 ஆயிரம் பேர் எயிட்ஸால மரணிக்கினம். பாகிஸ்தானில கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் எச்.ஐ.வி காவிகளா இருக்கினம். சீனாவின்ட விசயங்கள் வெளியில தெரியாது. ஆனா அங்க 5 லட்சம் முதல் 15 லட்சம் பேர் வரையில எச்.ஐ.வி காவிகளா இருக்கினம் என்டு தெரிய வருகிறது.”

“உந்த நோய் வராம தடுக்க வழிகிடக்கே?”

“ஒருவனுக்கு ஒருத்தி என்ட முறையில வாழ்க்கை நடத்தினமென்டா உதில இருந்து தப்பலாம்.ஆனா முறை தவறி பல பேரோட சகவாசம், கண்ட இடத்தில ஆசைய தீர்த்துக்கொள்ளுற மனோபாவம், இயற்கைக்கு மாறான உறவு முறை என்ட விசயங்களை மனசில் இருந்து அப்புறப்படுத்தவேணும் சரியே.”

“சிவனே என்டு கிடக்க வேணும். என்ன.”

“அப்பிடியென்டும் இல்ல. உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப் போகக்கூடாது. காலை வாரி விடுகிற சந்தர்ப்பம் சூழ் நிலையளைப் பத்தி கொஞ்சம் விழிப்பா இருக்க வேணும்.”

“எங்கட பெடியளுக்குத்தான் உதை சொல்ல வேணுமென்ன?”

“உந்த எயிட்ஸ் வைரஸ் 1920 களில கொங்கோவில உருவாச்சுதென்டு நம்புகினம்.சிம்பஞ்சி குரங்கிட்ட இருந்துதான் உது மனுசருக்கு பரவியிருக்குமென்டு கூறுகினம். 1980 வரையில எத்தின பேருக்கு எச்.ஐ.வி யால பீடிக்கப்பட்டவை உதில எத்தின பேருக்கு எயிட்ஸ் வந்துது என்டு சரியான கணக்கு எதுவும் இல்ல. 1980 ல தான் உந்த எச்.ஐ.வி பத்தின கதை அடிபடத் துவங்கியது. 1981 ல சுவாசப் பை நோயால பாதிக்கப்பட்ட 5 இளைஞர்கள் சிகிச்சை பெற வந்தவை அவர்கள் இனங்காணப்படாத புதிய வகை நோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்தது. இவர்கள்தான் இனங்காணப்பட்ட முதலாவது எச்.ஐ.வி நோயாளியள். இவையள் ஓரினச்சேர்க்கையாளர்கள். 1981 இறுதியில இவ்வாறான 270 பேர் இனங்காணப்பட்டவை இவையில 121 பேர் மரணிச்சவை. உதுதான் முதலாவது எயிட்ஸ் மரணம்.t

Comments