அமானா தகாபுல் வங்கியின் புதிய கிளை வெளிமடையில் | தினகரன் வாரமஞ்சரி

அமானா தகாபுல் வங்கியின் புதிய கிளை வெளிமடையில்

Amana Takaful PLC (ATL) தனது புதிய வெலிமடை கிளையை அண்மையில் திறந்து வைத்தது. நாடு முழுவதும் வரிவாக்கம் செய்யும் நோக்கத்தோடு தமது காப்புறுதி நிபுணர்களை நகரத்திலுள்ள வீடுகளுக்கே கொண்டு வருகின்றது.

இவ்வாரம்ப நிகழ்வில் ATL Life இன் பிரதான நிறைவேற்று அதிகாரி கிஹான் ராஜபக்ஷ கலந்து கொண்டார். மேலும் பிராந்திய முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள், அதன் ஊழியர்கள், பிரதான வர்த்தகர்கள், தொழில் வல்லுனர்கள், மற்றும் நிதிச்சேவைகள் சார் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புதிய கிளை திறப்பு நிகழ்வைப் பற்றி அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான கிஹான் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையர்களுக்கு தகாபுல் வழங்கிடும் பாரிய தெரிவுகளைக் கொண்ட தீர்வுகள் மற்றும் உயர்தரத்திலான சேவைகள் எமது வெற்றிக்கு காரணங்களாக அமைந்திருந்தன.

20வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ATL ஆனது மாற்றமடையும் மற்றும் வேகமாக முன்னேற்றமடையும் போட்டித்தன்மை கொண்ட சூழலில் தனது வெற்றியைக் கண்டுள்ளது. ATL தற்போது 37 கிளைகளைக் கொண்டு செயற்படுவதுடன் நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் தனது சேவையை வழங்குவதற்கு தன்னை மேலும் விஸ்தரிக்க எதிர்பார்க்கின்றது. தொடர்ந்தும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் தனது சேவைகளை வழங்குவதுடன் வசதியான, கட்டுப்படியான விலையில், நம்பகத் தன்மையுடன் புத்தாக்கம் மிக்கதும் மற்றும் நவீனத்துவமும் கொண்டதுமான காப்புறுதி உற்பத்திகளையும் வழங்குகின்றது.

Open to all’எனும் தனது கொள்கைக்கு ஏற்ப அனைத்து சமூகத்தினருக்கும் தமது வலையமைப்பில் பல் இனங்களைக் கொண்ட குழுவின் மூலம் சேவைகளை வழங்குகின்றது.

Comments