ரூபாயின் எதிர்காலம்: கருத்தரங்கு MBSL நிறுவனத்தின் ஏற்பாட்டில் | தினகரன் வாரமஞ்சரி

ரூபாயின் எதிர்காலம்: கருத்தரங்கு MBSL நிறுவனத்தின் ஏற்பாட்டில்

இலங்கை வங்கியின் துணை நிறுவனமும், முன்னணி நிதிசார் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாகத் திகழும் மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (MBSL) நிறுவனத்தினால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குதல் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பை வழங்கும் வகையில் எதிர்காலத்தை அறிந்து கொள்ளவும் பொது மக்களுக்கு அறிவூட்டும் வகையிலும் விசேட கருத்தரங்குத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடரின் இரண்டாவது கருத்தரங்கு ரூபாயின் சமகாலம் மற்றும் எதிர்காலம் எனும் தலைப்பில் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச இணைப்புகள் மற்றும் வழிகாட்டல் நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் இலங்கையின் தனியார் துறையைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர். அண்மைக்காலமாக வீக்கமடைந்து வரும் இலங்கை ரூபாய் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், தனியார் துறையைச் சேர்ந்த பணிப்பாளர்களுக்கும், சிரேஷ்ட முகாமையாளர்களுக்கும், நிதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள், வங்கியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் ரூபாய் சமகாலமாக வீக்கமடைந்து செல்வது மற்றும் எதிர்காலம் தொடர்பான முக்கியமான தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில் இந்த கருத்தரங்கின் பிரதான விரிவுரை மூலோபாய கற்கைகள் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் துஷ்னி வீரகோனால் முன்னெடுக்கப்பட்டதுடன், Frontier Research நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமல் சதரத்ன ரூபாயின் சமகாலம் மற்றும் எதிர்காலம் எனும் தலைப்பில் உரையாற்றினார்.

MBSL நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கருத்தரங்குத் தொடரின் முதலாவது நிகழ்வு இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவு அளவிலான தொழிற்துறை தற்காலத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள் எனும் தலைப்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments