ஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா | தினகரன் வாரமஞ்சரி

ஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா

இலங்கையின் பெண்களின் அழகையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதில் சந்தையில் முன்னோடியாகத் திகழும் நாமமான சன்சில்க், பல தலைமுறைகளை நீண்ட அடர்த்தியான பட்டுப் போன்ற மிருதுவான கூந்தலுடன் திகழ வைப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. இதனைக் கொண்டாடும் வகையில், ரமணி பெர்னாண்டோ சன்சில்க் ஹெயார் அன்ட் பியூட்டி அகடமி தனது 13 ஆவது பட்டமளிப்பு நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கொழும்பின் முன்னணி நவநாகரிக ஆர்வலர்கள் மற்றும் கூந்தல் அலங்கார நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்வியகத்திடமிருந்து 200க்கும் அதிகமான மாணவர்கள் இதன் போது சன்சில்க் மற்றும் ரமணி பெர்னாண்டோ சலோன்ஸ் அங்கீகாரத்துடனான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். இந்த பட்டமளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட ‘Hair Art 2018’ நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது, கொழும்பு, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ரமணி பெர்னான்டோ சன்சில்க் ஹெயார் அன்ட் பியூட்டி கல்வியகங்களைச் சேர்ந்த 10 மாணவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த 15 வருடங்களாக இயங்கும் ரமணி பெர்னாண்டோ ஹெயார் அன்ட் பியூட்டி சலோன், கூந்தல் மற்றும் அழகியல் நிபுணத்துவம் கொண்ட உயர் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் கூடிய கூந்தல் பராமரிப்பு பட்டதாரிகளை உறுதியாக உருவாக்கிய வண்ணம் உள்ளது. இலங்கையில் காணப்படும் பிரபல்யம் பெற்ற சலோன் வர்த்தக நாமங்களில் ஒன்றாக விளங்கும் ரமணி பெர்னாண்டோ சலோன்ஸ் உடனான பங்காண்மை பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், யுனிலீவர் நிறுவனத்தின் நம்பிக்கையை வென்ற முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமமான சன்சில்க் உடன் ஏற்படுத்தியுள்ள பங்காண்மை அதிகளவு வெற்றிகரமானதாகவும் அமைந்துள்ளது என்றார்.

Comments