Nokia 5.1 plus அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

Nokia 5.1 plus அறிமுகம்

மெச்சத்தக்க வகையில் செயல்திறன் வலுவைக் கொண்டுள்ள Nokia 5.1 plus, மகத்தான gaming செயல்திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) imaging தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன், நவீன பாணியிலான தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. அதன் நவீன வடிவமைப்பு மற்றும் தரமான கட்டமைப்பு ஆகியவற்றின் இணைப்புடன் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமாக, அடையப்பெறக்கூடிய அனுபவத்தை Nokia 5.1 plus வழங்கவுள்ளது.

இதுவரையில் வெளிவந்துள்ளவற்றுள் அதிநவீன MediaTek chipset ஆக திகழும் MediaTek Helio P60 இன் வலுவூட்டலுடன், மிகவும் கட்டுபடியாகும் விலையில் கிடைக்கின்ற ஸ்மார்ட்போன்களுள் ஒன்றாக Nokia 5.1 plus காணப்படுகின்றது. gaming, வீடியோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை இலகுவாக மேற்கொள்வதை கையாள்வதற்காக துல்லியமான வலுவை வழங்கும் வகையில் இதன் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Nokia 5.1 plus இன் chipset இல் கட்டமைக்கப்பட்டுள்ள அதிநவீன AI தொழில்நுட்பமானது முகத்தோற்றங்களை ஆழமான விபரங்களுடன் கண்டு கொள்வதற்கு இடமளிப்பதுடன், நொடிப்பொழுதில் புகைப்படத்தை மேம்படுத்துவதற்கும் இடமளிக்கின்றது. அத்தியாவசியமான அனைத்து சென்சார்களையும் (sensor) கொண்டுள்ளதுடன், அதிநவீன விளையாட்டுக்கள் (games) மற்றும் பயன்பாடுகளை (apps) நீங்கள் முழுமையாக அனுபவித்து மகிழ முடியும்.

Nokia 5.1 plus இன் நவீன புகைப்படவியல் (imaging) தொழில்நுட்பமானது, ஆழமான விபர உணர்வு கொண்ட புகைப்படவியல், தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ‘bokeh’ மங்கல் தோற்றம் மற்றும் உருவப்பட வெளிச்சம் (portrait lighting) ஆகியவற்றுடன் புகைப்படவியல் கலையகத்தில் எடுக்கின்ற பாணியிலான புகைப்படங்களை எடுக்க உங்களுக்கு இடமளிக்கின்றது.

dual 13MP/5MP rear sensor மற்றும் electronic video stabilisation தொழில்நுட்பம் ஆகியன நீங்கள் சீரான, உயர்ந்த அளவில் துல்லியமான வீடியோக்களை பதிவு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவுவதுடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுடைய விசேடமான தருணங்களை நேர்த்தியாக ஆவணப்படுத்திக் கொள்ள உதவுகின்றது. Phase Detection Auto Focus தொழில்நுட்பமானது உங்களது புகைப்படங்கள் தெளிவானவையாகவும், குறித்த இலக்கினை நோக்கியவையாகவும் அமைய உதவுகின்றது.

வியக்கவைக்கும் வகையில் ஓரத்திலிருந்து ஓரத்திற்கான வளைவுகளைக் கொண்ட (5.8”) முகத்திரையானது குறைந்தபட்ச இடப்பரப்பில் அதிகபட்ச உள்ளடக்கத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

Nokia 5.1 plus ஆனது 2.5D வளைவுகொண்ட முற்பக்க மற்றும் புறப்பக்க கண்ணாடிகளுடன், உயர் பளபளப்பான முடிவு வேலைப்பாட்டுனான வளைந்த விளிம்புகளைக் கொண்டமைந்த தூய்மையான வடிவமைப்புக் கொண்டவை. 8 மிமீ மெல்லிய தோற்றத்துடன், தொடர் வளைவு கொண்ட, கூடிய செளகரியத்துடனான வடிவமைப்பானது கைகளில் தவழும் போது ஆனந்த உணர்வைத் தருகின்றது. Nokia தொலைபேசியின் தராதரங்களை பூர்த்தி செய்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக Nokia 5.1 plus ஆனது வலிமையான உலோக கட்டமைப்பு மற்றும் தரம் தொடர்பான கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றது.

Comments