அவனும் அவளும் | தினகரன் வாரமஞ்சரி

அவனும் அவளும்

அவளது

சிரிப்பும் பேச்சும்

அவனுக்குத் தனியுடைமை!

எவளுடனும் அவன்

சிரிக்கலாம் கதைக்கலாம்

அது பொதுவுடைமை!

தனக்கு வருபவள்

இன்னொருவனால்

காதலிக்கப்பட்டவளாக

இருக்க மனது

இடங்கொடுப்பதில்லை

இத்தனைக்கும்

காதலித்து காதலித்து

பலபேரைக் கைவிட்டவன்தான்

எங்கும் போகலாமென்பது

அவனுக்கு மட்டுமே

அவள் எங்கு போகலாமெனத்

தீர்மானிப்பதும்

அவன் மட்டுமே!

திருமணத்தின் பின்னர்

தோண்டிப் பார்க்கின்றான்

அவளது கடந்த காலத்தை

அவனைத் தோண்டிப் பார்த்தால்

அள்ள அள்ளப் புழுக்களே!

விடிய விடிய

பேஸ்புக்கில் இருப்பான்;

வாய்திறக்கத்

தடை அவளுக்கு

போனை அவள் பிடித்தாலே

பொல்லாத சந்தேகம்

வந்துவிடும் அவனுக்கு

தனக்குக் கூட

சொந்தமில்லாதவனே அவள்

உலகம் ஏற்றுக்கொண்டாலும்

மனசு ஒற்றுக்கொள்ளாத

எத்தனையோ விடயங்கள்

இந்த ஆண்களிடம்!

கற்பு நெறியை

பெண்களுக்கு மட்டுமே

பொதுவாகப் பார்க்கிறார்கள்

Comments