இப் பருவ காலத்திலும் எல்லையற்ற சலுகைகளுடன் SampathCards | தினகரன் வாரமஞ்சரி

இப் பருவ காலத்திலும் எல்லையற்ற சலுகைகளுடன் SampathCards

எப்போதும் வாரி வழங்கி வருகின்ற SampathCards, மேலும் அதிக வியப்பைத் தருகின்ற தள்ளுபடிகள் மற்றும் வரப்பிரசாதங்களின் இணைப்புடன் இவ்விடுமுறைப் பருவகாலத்தினை மேலும் சிறப்பாக அனுபவிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கவுள்ளது.

சம்பத் மாஸ்டர்காட், வீசா கடனட்டை வாடிக்கையாளர்கள் மற்றும் சம்பத் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடனட்டை வாடிக்கையாளர்கள், நாடளாவிய ரீதியில் 1,500 இற்கும் மேற்பட்ட பங்காளர் விற்பனை மையங்களில் 50% வரையிலான தள்ளுபடிகளுடனான சலுகைகளைப் பெற்று இப்பருவகாலத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆனந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள உள்ளனர். நவநாகரிக தோற்றங்கள், இரம்மியமான விடுமுறைகள், அறுசுவை விருந்துகள், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பல அம்சங்கள் அடங்கலாக அட்டை வாடிக்கையாளர்கள் தமக்கும், தமது அன்பிற்குரியவர்களுக்கும் மறக்க முடியாத அனுபவங்களை ஏற்படுத்துவதற்கு உதவும் வகையிலான அனைத்து வகையான சேவைகள் மற்றும் உற்பத்திகளையும் SampathCards தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இப்பண்டிகைக்காலத்தில் வீட்டுக்கு வெளியில் விடுமுறை நேரத்தை ஒன்றாகப் போக்க விரும்புகின்றவர்கள் Shangri - La’s Golf Resort and Spa; Rainforest Eco Lodge; Mas Villa; Ranna Beach Villa; Shinagawa Beach; Tamarind Hill; Taprobana; The Habitat; The River House; Owl and the Pussycat Hotel; Villa 700; The Palms; Fisherman's Bay; Cassandra Culture Resort; Karpaha Sands; Madulkelle Tea and Eco Lodge; Melheim Haputale; Melheim Kandy; Simpson's Forest; The Blue Wave; Big Game Camps; Anilana Pasikuda; Anilana Nilaveli; Rajarata Hotel; The Grand Mountain Hotel; போன்ற இலங்கையில் மிகவும் விரும்பப்படுகின்ற பல முன்னணி நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகளுக்கு செல்லும் போது 50% வரையான தள்ளுபடிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Comments