Global SME விருதுகள்; நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு கெளரவம் | தினகரன் வாரமஞ்சரி

Global SME விருதுகள்; நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு கெளரவம்

ஸ்பெய்ன் நாட்டின், மெட்ரிட் நகரில் இடம்பெற்ற Global SME Finance விருதுகள் வழங்கும் நிகழ்வில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி விருதை வென்றிருந்தது. உலகளாவிய ரீதியில் இந்த விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்த 100 நிறுவனங்களிலிருந்து ஆசியா பிராந்தியத்தின் சிறந்த 5 சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்தது.

நிகழ்வை உலக வங்கியின் அங்கத்துவ அமைப்பான, IFC அல்லது சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்கின்றது. வளர்ந்து வரும் சந்தைகளில் காணப்படும் தனியார் துறையின் மீது அக்கறை கொண்ட மாபெரும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனமாக அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் வங்கியின் சார்பாக சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட நிறைவேற்று பதில் தலைவர் பண்டார ஜயதிலக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 80 நாடுகளைச் சேர்ந்த 275 க்கும் அதிகமான நிறுவனங்களின் 675 நபர்கள் கலந்து கொண்டனர். இதன் போது, பாரம்பரிய பொருளாதாரத்தில் சிறிய, தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தில் புத்தாக்கங்கள், பங்காண்மையில் ஒழுங்குபடுத்தல்கள் போன்றன எவ்வாறு உதவி செய்யக்கூடியது என்பது பற்றி கலந்துரையாடியிருந்தனர். விருதுகளுக்கான வெற்றியாளர்களை தெரிவு செய்யும் நடுவர் குழாமில், உலகின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் அடங்கியிருந்தனர்.

பண்டார ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “The Global SME Finance விருதுகள் என்பது, சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பிரிவில் புத்தாக்கங்கள் ஊடாக சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த நிதிசார் நிறுவனங்கள் மற்றும் நிதியியல் நிறுவனங்களை கெளரவிக்கும் வகையில் அமைந்திருந்தது.

Comments