நாயை உயிருடன் எரித்துக் கொன்ற நபர் கைது | தினகரன் வாரமஞ்சரி

நாயை உயிருடன் எரித்துக் கொன்ற நபர் கைது

‘லெப்ரடோ’ ரக நாயொன்றைக் கூட்டுக்குள் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு, கொப்பரா சந்தி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் கடந்த 31ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

இக் கொடூரச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் நேற்று முன்தினம் (4) நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் மாலை 4 மணியளவில் நபர் ஒருவரை கைது செய்தனர்.

38 வயதான இந் நபரை நேற்று (5) நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.

Comments