தனித்துவமான கிறிஸ்மஸ் ட்ரக் வீதி நிகழ்வுடன் பண்டிகை காலத்தை பிரகாசிக்கச் செய்த | தினகரன் வாரமஞ்சரி

தனித்துவமான கிறிஸ்மஸ் ட்ரக் வீதி நிகழ்வுடன் பண்டிகை காலத்தை பிரகாசிக்கச் செய்த

இலங்கை வாடிக்கையாளர் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரும் அதன் தனித்துவமான விடுமுறைப் பாரம்பரியத்துடன் Coca-Cola Sri Lanka Private Ltd., அண்மையில் தமது வருடாந்த கிறிஸ்மஸ் ரோட்ஷோ வீதி நிகழ்வினை ஆரம்பித்தது. பாடகர்கள் குழுவுடன் பல உற்சாகம் தரும் விளையாட்டுக்களையும் பரிசுகளையும் அம்சங்களாக கொண்டிருந்த இவ்வீதி நிகழ்வு டிசம்பர் 14 முதல் 25 வரை நடைபெற்றது.

இவ்விடுமுறைக் காலத்தில் மகிழ்ச்சியை பரவச்செய்திட Coca-Cola, பியகமவில் அமைந்துள்ள உற்பத்தித்தொழிற்சாலையை விட்டுவந்து கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரை பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. கிறிஸ்மஸ் பாடல்களை தொடர்ந்து இசைத்த வண்ணம், பண்டிகைக்கால உணர்வு மேலோங்கிடும் வண்ணம் மிகவும் பிரகாசமாக காணப்படும் Coca-Cola ட்ரக் சுமார் 20 இடங்களுக்கு சென்றது. அவையாவன: சுப்பர் மார்க்கட்கள், ஹைட்பார் கோர்னர் மற்றும் தலவத்துகொட Arpico, இராஜகிாிய, ஜா-எல, கட்டுபெத்த மற்றும் நீர்கொழும்பு கார்கில்ஸ், Super K Negombo, Laugfs நீர்கொழும்பு, Spar தலவத்துகொட மற்றும் ​தெரிவு செய்யப்பட்ட சதொச, பெரேரா அன்ட் சன்ஸ் விற்பனை நிலையங்கள். கொழும்பு சிடி செண்டர், சவோய் - வெள்ளவத்தை மற்றும் மெஜஸ்டிக் சிடி ஆகிய இடங்களில் உற்சாகம் தரும் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தவும் இருக்கிறது. மேலும் இப்பருவ காலத்தின் மெஜிக் இணை பரவச் செய்திட இப்பயணத்தின் போது Coca-Cola தமது நம்பிக்கை மிகுந்த வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான பரிசுகள் மற்றும் ஆச்சரியங்கள் தரும் வெகுமதிகள் பலவற்றை வழங்கவிருக்கிறது.

Comments