Lanka Hospitals இன் ஆலோசனை மையம் காலி நகரில் | தினகரன் வாரமஞ்சரி

Lanka Hospitals இன் ஆலோசனை மையம் காலி நகரில்

மருத்துவப் பராமரிப்பு சேவை வழங்கல் ஸ்தாபனமாகத் திகழ்ந்து வரும் Lanka Hospitals PLC, தனது முதலாவது மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை மையத்தை அண்மையில் காலியில் திறந்துள்ளது. இலங்கையில் Lanka Hospitals இனால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலாவது மையமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை, நேரடி ஈ- சேனலிங் நியமனங்கள், பொதுமருத்துவம், அடிப்படை மருத்துவப் பராமரிப்பு வசதிகள்,தடுப்புூசி மற்றும் நோய்த்தடுப்பு வசதிகள், ஆய்வுகூட சேவைகள், மருந்தகம் மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கான அம்பியுூலன்ஸ் சேவை போன்ற பல்வேறு மருத்துவப் பராமரிப்புத் தேவைகளுக்கான சேவைகளை இந்த மையம் வழங்கிவருகின்றது.

காலியில் மருத்துவ சிகிச்சை மையம் ஒன்றைத் திறந்துவைத்து,தென் மாகாணத்திலும் தனது சேவைகளை விஸ்தரித்துள்ளமையை முன்னிட்டு Lanka Hospitals மிகவும் பெருமைகொள்கின்றது. 2002 ஆம் ஆண்டில் Lanka Hospitals இயங்க ஆரம்பித்தமையைத் தொடர்ந்து, இலங்கையின் பல பகுதிகளிலும் 20 ஆய்வுகூடங்கள், 16 மருந்தகங்கள், 4 நிறுவன வர்த்தக உறவுமுறைகள் மற்றும் ஒரே சிந்தனையைக் கொண்ட சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருடனான பங்குடமைகள் மூலமாக தனது அடைவு மட்டத்தை Lanka Hospitals விஸ்தரித்துள்ளதுடன், இவை இலங்கையிலுள்ள மிகச்சிறந்த தனியார் வைத்தியசாலைகளுள் ஒன்றாக நாம் நிலைபெறுவதற்கு எமக்கு இடமளித்துள்ளன.

எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் எமது வலையமைப்பினை விஸ்தரிக்கும் எமது முயற்சிகளை நாம் ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு புதிய முன்னெடுப்புகளின் முதலாவது படியாக காலியில் எமது பிரசன்னம் அமையுமென எதிர்பார்க்கப்படுவதாக Lanka Hospitals குழும பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் பிரசாத் மெதவத்த குறிப்பிட்டார்.

Comments