SOS சிறுவர் கிராமங்களில் No Child Alone திட்டம் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

SOS சிறுவர் கிராமங்களில் No Child Alone திட்டம் ஆரம்பம்

இலங்கையில் தனிமையில் வளரும் பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கலந்துரையாடும் குழுநிலை விவாதம் ஒன்றுடன் இலங்கை SOS சிறுவர் கிராமம் (SOSCVSL) தனது விசேட செயற்திட்டமான ‘No Child Alone’ஐ ஆரம்பித்திருந்தது. இந்த கலந்துரையாடலின் போது, கிராமங்களில் குடும்ப அடிப்படையிலான பராமரிப்பு இன்றி வளரும் பிள்ளைகளின் நலனுக்கு தேவைப்படும் சிறந்த சூழல் தொடர்பான விடயங்கள் பற்றி கலந்து கொண்ட நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள், தமது அனுபவங்கள் மற்றும் சிந்தனைகளை பகிர்ந்திருந்தனர்.

இந்த குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் குழந்தை உரிமை சங்கத்தின் பதில் தலைவர் கலாநிதி ஹிரந்தி விஜேமான்ன, சமூகவியலாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் தலைமை அதிகாரியுமான கலாநிதி நிஷார பெர்னாண்டோ, BDO பங்காளர்கள் முகாமைத்துவ பங்காளர் சுஜீவ ராஜபக்ஷ, இலங்கை SOS சிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை மற்றும் இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் வர்த்தக நாம தூதுவர் பூஜா உமாஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது, எந்த சந்தர்ப்பத்திலும், எந்த சூழலும் ஒவ்வொரு குழந்தைக்கும் குடும்பமொன்றில் வளர வேண்டிய சூழல் காணப்பட வேண்டியதன் முக்கியத்தும் உணர்த்தப்பட்டிருந்தது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு அன்பும் அரவணைப்பும் நிறைந்த குடும்ப சூழல் அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்கு மேலாக பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. தொடர்ச்சியாக பராமரிப்பவருடன் உறுதியான பந்தம் என்பதை உணர்த்துவதுடன், பிள்ளையின் உரிமைகளான கல்வி, சுகாதாரம், விருத்தி மற்றும் செவிமடுத்தல் போன்றன எய்தப்படுவதை உறுதி செய்வதும் அமைந்துள்ளது.

அரவணைப்பு நிறைந்த குடும்பத்தினூடாக, சிறுவர்களுக்கு உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்தவர்களாகவும், கடுமையான உலகை சந்திப்பதற்கு உதவுவதாகவும் அமைந்துள்ளது. இந்த விடயங்களினூடாக பிள்ளைகளுக்கு முழுமையான, நிலையான, மகிழ்ச்சிகரமான வயதுவந்தவர்களாக வளர்ச்சியடைய உதவ முடியும் என்பதுடன், சமூகத்துக்கும் நாட்டுக்கும் நேர்த்தியான பங்களிப்பை வழங்கக்கூடியவர்களாக மாற்றவும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டிருந்தன.

Comments