ஜனாதிபதி மைத்திரி பிலிப்பைன்ஸ் விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி மைத்திரி பிலிப்பைன்ஸ் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். 

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டர்டேயின் அழைப்பின்பேரில் ஜனாதிபதியின் விஜயம் அமைவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன், அரசியல், பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்துகவனம் செலுத்தப்படும் என்று வெளிவிவகார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கிக்குச் செல்லும் ஜனாதிபதி, சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்திற்கும் விஜயம் செய்வார்.

Comments