நேத்ராவில் விசேட பொங்கல் நேரலை ஒளிபரப்பு | தினகரன் வாரமஞ்சரி

நேத்ராவில் விசேட பொங்கல் நேரலை ஒளிபரப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையில் தைப்பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை (15) காலை 7.30 முதல் விசேட பொங்கல் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகிறது.

கூட்டுத்தாபனத்தின் தலைவி இனோக்கா சத்யாங்கனி, பணிப்பாளர் நாயகம் சாரங்க விஜயரத்ன, நேத்ரா பணிப்பாளர் எம்.என்.ராஜா ஆகியோரின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பட்டிமன்றம், திரைப்படம், விசேட நிகழ்ச்சிகள், புத்தம் புதிய இசை நிகழ்ச்சி ஆகியன இடம்பெறும் என நேத்ரா பணிப்பாளர் எம்.என்.ராஜா தெரிவித்தார்.

இன்றைய அவசர உலகில் பண்டிகைகள் கொண்டாட்டமா, திண்டாட்டமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும்.

அலரிமாளிகையில் நடைபெறும் தைப்பொங்கல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகும். முற்றிலும் உள்ளூர் கலைஞர்கள் வழங்கும் புத்தம் புதிய இசை நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகும். (வி)

Comments