பாடசாலைகளில் போதைவஸ்து ஒழிப்பு வாரம் பிரகடனம் | தினகரன் வாரமஞ்சரி

பாடசாலைகளில் போதைவஸ்து ஒழிப்பு வாரம் பிரகடனம்

நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியைப் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாகக் கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ளது.  

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் பணிப்புரைக்கமையவே கல்வி அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.  

இது தொடர்பான சுற்றுநிருபங்கள் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கனவே கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

ஜனாதிபதி செயலகத்தின் போதைவஸ்து ஒழிப்பு பிரிவும் ஏனைய அரசாங்க நிறுவனங்களும் இணைந்து இவ்வாரத்துக்குள் நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் போதைவஸ்து ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை முன்னெடுக்கவுள்ளனர்.  

போதைப் பொருள் பாவனை பாரிய சமூகப் பிரச்சினையாகியுள்ளது. சிறுவர்களே மிக இலகுவாக இதன் விற்பனைக்கு இலக்கு வைக்கப்படுகின்றனர். பிள்ளைகள் வாழும் வீடும், அவர்களது சுற்றுச்சூழலுமே இத் தீய பழக்கத்துக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது. எனவே, பிள்ளைகள் வாழும் வீடு போதைப்பொருள் இல்லாதபிள்ளைகளுக்கேற்ற பாதுகாப்பான இடமாக இருத்தல் வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய தீமைகளை அறிந்திருந்தால் மட்டும் போதாது, அதனை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேட்டுக்கொண்டுள்ளார். 

Comments