ரம்மியமாக காட்சியளிக்கும் ஹோட்டல் றோயல் கிராண்ட் பரடைஸ் | தினகரன் வாரமஞ்சரி

ரம்மியமாக காட்சியளிக்கும் ஹோட்டல் றோயல் கிராண்ட் பரடைஸ்

களனி, கோணவலயில் கிராமிய சூழ்நிலையில் ஹோட்டல் றோயல் கிராண்ட் பரடைஸ் கடந்த மூன்று வருடங்களாக அதிநவீன வசதிகளுடன் இயங்குகின்றது.

வார்ஸிடி உயர்கல்வி நிறுவனம் மற்றும் களனிய மிகோ உயர்கல்வி நிறுவனம் ஆகியவற்றின் கிளை நிறுவனமாக ஹோட்டல் றோயல் பரடைஸ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பட்ஜட் ஹோட்டல் என்று கூறுகிறார் அதன் உரிமையாளரான பியதிஸ்ஸ ராஜபக்‌ஷ.

இக்காலத்தில் ஊடகம் மற்றும் தகவல் மாநாடுகளையும் குறைந்த செலவில் திருமண நிகழ்வுகளையும் நடத்த ஹோட்டல்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் விருந்தினரின் வருகைக்கு ஏற்ப ஹோட்டல்களை தெரிவு செய்து கொள்வது எளிதான விடயமல்ல. ஆனால் எங்கள் ஹோட்டலில் விருந்தினர்களின் எண்ணிக்ைகக்கு ஏற்ற வகையில் இடங்களை எளிதாக தெரிவு செய்து கொள்ளமுடியும் என்றார்.

இங்கு ஐந்து திருமண மண்டபங்கள் உள்ளன. இவை விருந்தினர்களின் எண்ணிக்ைகக்கு ஏற்ப அமைந்துள்ளன. இது மட்டுமன்றி ஊடக மாநாடுகளை நடத்த 50 பேர் மற்றும் 70 பேர் அமரக் கூடிய இரண்டு மண்டபங்களும் உள்ளன. விருந்தினர்களின் எண்ணிக்ைகக்கு ஏற்ப தேவைப்படும் மண்டபங்களை தெரிவு செய்து கொள்ள முடியும்.

அதுமட்டுமன்றி விருந்தினர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் இதே குழுமம் கவனத்துக்குக் கொள்கிறது.

அதற்கான நவீன வசதிகளுடன் கூடிய பஸ்கள் எங்களிடம் உள்ளன. கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் கூட எங்கள் வாகன சேவையை பயன்படுத்திக் கொள்கின்றன என்று கூறுகிறார் பியதிஸ்ஸ ராஜபக்‌ஷ. அதேநேரம் எங்கள் ஹோட்டலில் திருமண ஜோடிகளுக்கு படங்கள் எடுக்க கூடிய வகையில் இயற்கையின் புராதான நகரங்கள், கிராமங்களை எங்கள் ஹோட்டலிலேயே வடிவமைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Comments