Crysbro Group இற்கு DIMO அறிமுகப்படுத்தும் CLAAS JAGUAR | தினகரன் வாரமஞ்சரி

Crysbro Group இற்கு DIMO அறிமுகப்படுத்தும் CLAAS JAGUAR

இலங்கையில் விவசாயப் பண்ணைகளை இயந்திரமயமாக்குவதற்கு அனுசரணையளிப்பதில் நவீன விவசாய உபகரணங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் DIMO முன்னின்று உழைத்து வந்துள்ளது. விவசாய இயந்திரங்களின் உற்பத்தியில் ஜேர்மன் நாட்டின் CLAAS இனால் கட்டமைக்கப்பட்ட CLAAS Jaguar இரு சுய இயக்க, நவீன அறுவடை இயந்திரத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பாலுற்பத்தித் தொழிற்துறையில் தரமான உலர் தீவனத்திற்கான கேள்வி அதிகரித்துச் செல்வதையடுத்து, விவசாய உபகரணங்களைத் தயாரிப்பதில் முன்னிலை வகித்துவரும் நிறுவனமான CLAAS, உலகப்புகழ்பெற்ற JAGUAR series தீவன அறுவடை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தரமான தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக இதற்கு முன்னரும் பல்வேறு தெரிவுகளை முயற்சி செய்திருந்தபோதும், அவை எவையுமே எதிர்பார்த்த பெறுபேறுகளைத் தரவில்லை. காகிதாதிகளை வெட்டும் இயந்திரத்தால் தானியங்களை முறையாக அரைக்க முடியாமையால் உலர் தீவனம் மோசமானதாக காணப்பட்டதுடன், தினமொன்றில் 3-4 ஏக்கர் நிலத்தில் மட்டுமே அறுவடையை மேற்கொள்ளவும் முடிந்தது.

ORBIS 450 உடனானது AGUAR 850 ஆனது உற்பத்தித்திறன், தெரிவு, செளகரியம் ஆகியவற்றை மேலும் அதிகரிப்பதுடன், மேலதிக அறுவடையையும் வழங்கும் வகையில் தொழில்நுட்பரீதியாக நவீனமான ஒரு இயந்திரமாகக் காணப்படுகின்றது.

தானியங்களை முறையாக அரைக்க உதவுகின்ற ஒரு சோளதானிய அரைப்பானை இந்த இயந்திரம் கொண்டுள்ளதுடன், அதன் காரணமாக தரமான உலர் தீவனத்தை உற்பத்திசெய்கின்றது.

முதலாவது CLAAS Jaguar அறுவடை இயந்திரம் அண்மையில் Crysbro Group of Companies குழுமத்தின் ஒரு அங்கமான Golden Grains (Pvt) Ltd நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இக்குழுமம் கந்தளாய் மற்றும் மகியங்கனை ஆகிய இரு இடங்களில் அமைந்துள்ளது.

850 ஏக்கர் நிலத்தில் விளைந்த சோளத்தை அறுவடைசெய்து, உலர் சோள தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக சோள அரைப்பான் இயந்திரத்தை இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் என்ற பெருமை Golden Grains நிறுவனத்தையே சாரும்.

Comments