PickMe ஓட்டுநர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் | தினகரன் வாரமஞ்சரி

PickMe ஓட்டுநர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள்

pick me நெண பாஹன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தினூடாக தனது வாகன ஓட்டுநர்களுக்கு வெகுமதியளிப்பதுடன் அவர்களின் பிள்ளைகளுக்கு பெறுமதிமிக்க பரிசுப் பொதிகளை வழங்கியுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற வருடாந்த நெண பாஹன சமூக பொறுப்புணர்வு திட்ட நிகழ்வின் ஊடாக தமது 1000 வாகன ஓட்டுநர்களின் பாடசாலை செல்லும் வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுப்பொதிகள் அண்மையில் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பரிசுப்பொதியிலும் எழுதுப்பொருட்கள், பாடசாலை உபகரணங்கள், பாடசாலை பை, உணவுப்பெட்டி மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன.

குறித்த 1000 வாகன ஒட்டுநர்களும் தத்தமது நடத்தை, செயல்பாடு மற்றும் நிதிசார் செயற்திறன் அடிப்படையில் மாத்திரமன்றி முறைப்பாடுகளின் எண்ணிக்கை, தரப்படுத்தல்கள் மற்றும் நற்பெயர் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 2500 இற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை பரிசுப்பொதிக்காக PickMe, 4.5 மில்லியன் ரூபாவை செலவிட்டிருந்தது. இந்நிறுவனமானது PickMe உடன் கடந்த மூன்றரை வருடங்களாக கைகோர்த்து பாராட்டத்தக்க தரப்படுத்தல்கள், செயல்திறன் மற்றும் நற்பெயரை ஈட்டிக்கொண்ட மேலதிக 50 ஓட்டுநர்களையும் கெளரவித்திருந்தது.

எமது வர்த்தக வெற்றியின் பங்காளர்களாக எமது ஓட்டுநர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களுடனான அவர்களது நெருங்கிய உறவு மற்றும் நன்னடத்தை ஆகியன எமது மதிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. தமது செயல்பாடுகள் ஊடாக இந்த பெறுமதிகளுக்கு வலுச்சேர்க்கும் ஓட்டுநர்களை கெளரவிக்க நாம் தீர்மானித்தோம் என பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்ஃபர் ஜிஃப்ரி தெரிவித்தார்.

மேலும் PickMe நிறுவனத்துடன் 1 1ஃ2 வருடங்களாக பணியாற்றிவரும் பாணந்துறையைச் சேர்ந்த ஓட்டுநர் சமந்த பெரேரா தனது குடும்பத்தின் சகல தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வதற்கு PickMe மூலமாக பெற்றுக்கொண்ட ஆதாயத்தை பயன்படுத்திக் கொண்டதாகவும், தன்னோடு பயணிக்கும் எவ்வகையான நபர்களையும் மிகவும் பாதுகாப்பாக அவர்களது பயண இலக்கு நோக்கி கொண்டு செல்வதே தமது இலக்கு எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக நெணபாஹன ஊடாக கிடைத்த ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்க செயல்பாடு என்றும், தமது பிள்ளைகளின் கல்வி சார்ந்த கனவை நனவாக்கிக் கொள்வதற்கு அளப்பரிய பங்களிப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments