உருளைக் கிழங்கு இறக்குமதி வரி அதிகரிப்பு | தினகரன் வாரமஞ்சரி

உருளைக் கிழங்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

விவசாய அமைச்சர் பி. ஹெரிசனிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க இதுவரை 20 ரூபாவாக இருந்த இறக்குமதி வரியை 50 ரூபாவாக பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ளதை கருத்தில்கொண்டு இவ் வரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

Comments