ஐ.தே.கவின் பிரேரணை ஒழுங்கு பத்திரத்தில் சேர்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.கவின் பிரேரணை ஒழுங்கு பத்திரத்தில் சேர்ப்பு

ஐக்கிய தேசிய கட்சியால் தேசிய அரசாங்கத்துக்கான முன்னெடுப்பு பற்றிய யோசனை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 01ஆம் திகதி வெளியிடப்பட்ட 2019 பெப்ரவரி 20ஆம் திகதி ஒழுங்கு பத்திரத்தில் 'பிரேரணை முன்னறிவித்தல்களும், தினப் பணிகளும்' என்ற தலைப்பில் முதலாவதாக இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஒழுங்குப் பத்திரத்தில் இரண்டாவதாக பாராளுமன்ற நிர்வாகத்துக்கான ஆணையாளரின் (ஒம்புட்ஸ்மன்) மாதச் சம்பளத்தை 1 இலட்சத்து 35,000 ரூபாவாகவும் மாதாந்த தொலைபேசி கொடுப்பனவை 10,000 ரூபாவாகவும் மாதாந்த எரிபொருள் கொடுப்பனவை 225 லீற்றராகவும் திருத்தியமைப்பதற்கான பிரேரணை முன்னறிவித்தலும் ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Comments