இளமைத் தோற்றத்திற்கு தழும்புகளின்றிய சிகிச்சை: டேர்டன்ஸ் ஒப்பனை சிகிச்சை நிலையத்தில் | தினகரன் வாரமஞ்சரி

இளமைத் தோற்றத்திற்கு தழும்புகளின்றிய சிகிச்சை: டேர்டன்ஸ் ஒப்பனை சிகிச்சை நிலையத்தில்

நோயாளர்கள் தமது இளமைத் தோற்றத்தை மீட்டெடுக்கும் வகையில், அவர்களுக்கு தலைசிறந்த பல்வேறு தெரிவுகளை வழங்குவதுடன், சத்திர சிகிச்சை மற்றும் தழும்புகளின்றிய சிகிச்சை தொழில்நுட்பங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் டேர்டன்ஸ் ஒப்பனை சிகிச்சை நிலையம் கொண்டுள்ளது. மதிய உணவு இடைவேளை நேரத்திலோ அல்லது பணி நிறைவடைந்து வீடு செல்லும் போதே, குறித்த இடத்தில் மாத்திரம் மயக்க மருந்தை செலுத்தி, தளும்புகள் இன்றிய சிகிச்சை நடைமுறைகளை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளரின் சொந்த இரத்தத்தை உபயோகித்து, செறிவூட்டப்பட்ட Platlets மற்றும் மேம்பட்ட வளர்ச்சிக் காரணிகளுடன் அதனை மாற்றியமைத்து, மூப்படைதலைத் தடுப்பதற்காக செயல்திறன் மிக்க ஒரு சிகிச்சை முறையாக Platelet rich plasma (PRP) காணப்படுகின்றது. PRP சிகிச்சை முறையில் குணப்படுத்தும் பண்புகள் குணப்படுத்தலை தூண்டுவதுடன், கல மீளமைப்பானது திசுக்கள் மீளவும் உற்பத்தியாவதற்கு வழிகோலுகின்றன. முகத்தில் தோன்றும் மூப்படைதல், கண்களுக்கு கீழான கருவளையம் மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றிற்கு இச்சிகிச்சை முறையை பயன்படுத்த முடியும்.

சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் வரிகள் போன்ற மூப்படைதலுக்கான அறிகுறிகளிலிருந்து சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தை வழங்கும் வகையில், வடுக்கள் மற்றும் வெளி நீண்ட அடையாளங்களின் தோற்றத்தைக் குறைப்பதற்கு உதவுகின்ற சத்திர சிகிச்சை அல்லாத ஒரு தொழில் நுட்பமாக Micro-needling சிகிச்சை முறை காணப்படுகின்றது. Collagen மற்றும் elastin ஆகியவற்றை உற்பத்தியாக்குவதற்கு உடலின் இயற்கையான குணமடையும் நடைமுறையைத் தூண்டி, சருமத்தின் அடித்தோலுக்குள் சிறிய தடங்களை (tiny channels) உற்பத்தி செய்வதற்கு இதனை பயன்படுத்த முடியும். முகம், கழுத்து, மார்பு, கைகள், கால்கள் மற்றும் அடி வயிறு ஆகிய உறுப்புக்களில் Micro-needling சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும்.

சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள், வரிகள், வெற்று பகுதிகளை நிரப்பி, முழுமையான புத்துணர்ச்சியையும் திரும்பப் பெறுவதற்கு Dermal fillers சருமத்தை மெருதுவாக்கின்றது.

Comments