NCW Holdings நிறுவனத்திற்கு தர நிர்ணய சான்றிதழ் | தினகரன் வாரமஞ்சரி

NCW Holdings நிறுவனத்திற்கு தர நிர்ணய சான்றிதழ்

NCW Holdings நிறுவனம் அண்மையில் இலங்கை தரங்கள் நிறுவனம் (SLSI) வழங்கும் தர நிர்ணய சான்றிதழை (ISO 9001 -= 2015) பெற்றது. ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட குறுகிய காலத்தில் இந்த தர நிர்ணய சான்றிதழை மேற்படி நிறுவனம் பெற்றிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். NCW Holdings முகாமைத்துவ சேவைகளை வழங்கும் இலங்கையிலுள்ள சர்வதேச நிறுவனமாகும். 2017 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் உள்ளூர் சேவைகளை ஆரம்பித்தது.

NCW Holdings ஆரம்பிக்கப்பட்ட சில காலத்தில் மற்றைய நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு பெருமளவா ன தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அவ்வாறு தொழில்வாய்ப்புகளை பெற்ற துடிப்பான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இளைஞர்களே இந்த நிறுவனத்தை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றுள்ளனர். NCW Holdings அதன் வாடிக்ைகயாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விசேட அனுபவங்களை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் தாய்நிறுவனம் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ளது.

NCW Holdings நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரான நவீன் விஜேவிக்ரம ஒரு இளம் தொழில்வான்மையாளராவார். உள்ளூர் விருந்தோம்பல் சேவையில் பல வருட அனுபவம் பெற்றவர். நிறுவனத்தின் தாய் நிறுவனத்தை 2005 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்த எனக்கு எனது தாய் நாட்டில் கிளையொன்றை ஆரம்பிக்க முடிந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. அத்துடன் குறுகிய காலத்தில் ISO சான்றிதழை பெற முடிந்தமை பெருமை தருகிறது.

எனது ஊழியர்கள் மற்றும் ஏனையோரின் கடப்பாடு மற்றும் ஒழுங்கின் மூலமே இந்த இலக்ைக எட் முடிந்திருக்கிறது என்பதை கூறியாக வேண்டும்.

200க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ள நாம் இவர்களுக்கான அதிக சம்பளம், காப்புறுதி ஆகியவற்றையும் வழங்க முடிந்துள்ளது.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார NCW Holdings நிறுவனத்தின் மூலம் உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவுஸ்திரேயாவுக்கு கல்வி கற்கச் சென்றுள்ள எமது இளைஞர்கள் தமது பணத்தேவைக்காக தொழில்வாய்ப்புக்கள் இங்கு வழங்கப்படுவதையும் அவர் பாராட்டினார்.

Comments