ராகு கேது மாற்றங்கள் | தினகரன் வாரமஞ்சரி

ராகு கேது மாற்றங்கள்

ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடம்பெயர்கிறார்கள்.

ஏழுநூறுகோடி ஜனங்களை எட்டிப் பிடிக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கிரக மாற்றங்கள் நமக்கு மட்டுமா என்று யாராவது கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? கொடுக்கும் ராகு, கெடுக்கும் ராகு, கொடுக்கவே கொடுக்கும் ராகு, கெடுக்கவே கெடுக்கும் ராகு, கொடுத்துக் கெடுக்கும் ராகு, கெடுத்துக் கொடுக்கும் ராகு என்று பல கோணங்களில் வர்ணிக்கப்படுகிறார். கால சர்ப்ப யோகம், கால சர்ப்பதோஷம், காலாமிர்த யோகம், கேள யோகம் மற்றும் பிற கிரகங்களோடு இணையும்போது தரும் யோகங்கள், தோஷங்கள் என்று விபரித்துக் கொண்டே போகலாம். கல்லாதவன் கவி பாடியதும், பாடுவதும், மண்ணில் தவழ்ந்தவன் மணிமகுடம் சூடிக் கொண்டதும், கொள்வதும், அரசர்கள் ஆண்டியாவதும், ஆண்டிகள் அரசர்கள் ஆவதும், வெறும் மணல் மேட்டில் இருந்து மாளிகை எழுவதும் இவர்களின் மகிமையான அருளினால் தான். இருக்கும் இடம், இணைந்திருக்கும் கிரகங்களை நிர்ணயித்து யோகங்களைப் பெருக்கவும், தோஷங்களை நீக்கவும் செய்கிறார்கள். தொழில்களையும், வியாதிகளையும், செல்வங்களையும், செல்வாக்கையும், பெண்களின் வாழ்க்கையில் மாங்கல்யத்தையும், விதவைக் கோலத்தையும், திருமணம் நடக்காமல் தெருவில் இறங்கச் செய்யும் அலங்கோலத்தையும் இவர்களே முன்னின்று நடத்துகிறார்கள். இவர்கள் இனிமேல் ஒன்றரை வருஷங்களுக்கு நமக்கு அருளப் போகும் சுப செளமியங்களைப் பார்ப்போம்.

-மிதுனத்திற்கு இடம்பெயரும் ராகு பகவானும், தனுசுவிற்கு இடம் பெயரும் கேது பகவானும் வரப் போகும் ஒன்றரை வருஷங்களுக்குத் தரப் போகும் நற்பலன்களை ராசிவாரியாகப் பார்ப்போம்.

பெப்ரவரி, 14ம் திகதி, தமிழுக்கு மாசி மாதம் 2ம் நாள், வியாழக்கிழமை 13நாடி, 40விநாடி அளவில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயருகிறார்.

-மேஷ ராசி

கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு, அதாவது மேஷ ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு ராகு பகவான் வருகிறார். எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் நான்தான் முதல் என துடித்துப் பாய்ந்து முன்னேறும் வீரமும், வேகமும் கொண்ட அன்பா்களே உங்களை மேலும் வலுவூட்டவும், வெற்றிகளைப் பெற்றுத் தரவுமே ராகு பகவான் வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் பதினெட்டு மாதங்கள் நின்று அருளப்போகிறார். அந்த வேகங்கள் அதிகமாகிச் சண்டை சச்சரவுகளாக மாறக் கூடாது என்பதும் முக்கியமே. தொலை தூரம் சென்று திரவியம் தேடும் முயற்சிகளும் வரும். தொழில், வருமானம், சொத்துக்கள் மற்றும் சுகங்கள் என்று ஒன்றுக்கு ஒன்று முரணாண விஷயங்கள் பல தரப்பட்ட கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இவைகளைச் சமச் சீராக நடத்திச் செல்வது உங்கள் திறமையிலேயே தங்கி இருக்கிறது. குறுக்கு வழிகளில் பணம் தேட இலக்குகளை நிர்ணயித்தால் வழக்குகளைச் சந்திக்கவும் நேரும்.

தனுசு ராசிக்கு இடமாறும் கேது பகவான் உங்களுக்கு தரப்போகும் நன்மைகளைப் பார்ப்போம்.

மிக நல்ல செய்தியேதான் காத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் குரு பகவான் கேதுவுடன் இணைகிறார். இதனால் சுப பலன்கள் வேகமாகச் சுழன்று உங்கள் வழியில் வந்து சேரத் துவங்கும். மன நிம்மதியும், தொடும் காரியங்கள் தொல்லைகள் இன்றி நிறைவேறவும் இடமுண்டு. உற்றார் உறவினர் குடும்பத்தினர் சொன்ன சொல்லைக் கேட்பாா்கள். தந்தை வழி சகாயங்கள் தொழில் துறைக்குப் பெரும் துணையாக அமையும். எதிர்காலம் இனிமையாகவே அமையும்.

-ரிஷப ராசி

ராகு பகவானின் பெயர்ச்சியானது ஏற்றத் தாழ்வான பலனைத் தரும். பண முடக்கம் சிரமங்கள் தரும். குறித்த நேரத்தில் கொடுக்க முடியாது போனாலும், காலம் தாழ்த்தியாவது கொடுத்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பெரும் கஷ்டங்கள் சிரமங்கள் வந்து குவிய இடமில்லை. இதுவே பெரிய ஆறுதலான விஷயமாகும். கல்விக்கும், வாக்கு நாணயத்திற்கும், செல்வ சுகங்களுக்கும் ஊறு ஏற்படாமல் தப்புவது நல்ல யோகமே. நீச வழிகளில் வருமானங்கள் வரச் சந்தர்ப்பம் உள்ளது. வம்புகளும் கூடவே வரும். கவனம் தேவை.

குடும்பத்தில் சிறிய கலவரங்கள் வந்து போகும். நிம்மதி நெடு நாள் குலைந்து போகாது. கொஞ்சம் காலம் தானே பொறுத்துக் கொள்ளுங்கள். வம்புகள் தேடி வரும்போது வாயைக் கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால் இம்மாதிரிதான் நடக்கும். நா காக்க என்று சொல்லப்பட்டது உங்களுக்குத் தான். பதினெட்டு மாதங்களுக்கும் கவனம் தேவை.

தனுசுவில் கேது

அதிர்ஸ்டகரமான மாற்றம். தொழில் சிக்கல்கள் தீரும். விருத்தியும் வருமானங்களும் உயரும். வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். உறவினர் உதவிகள் செய்ய முன் வருவார்கள். முறைத்துக் கொண்டிருந்தாலும் தனது உறவினர்கள் செய்யும் உதவிகளை உங்கள் மனைவி தடுக்க மாட்டார். ஆயுள் விருத்தியும் மன அமைதியும் உண்டு. ஆன்மீகத்தில் அக்கறை காட்டவும் மனம் தூண்டும். இறைவன் அருளும் கிடைக்கும்.

-மிதுன ராசி

ராகு பகவான் சஞ்சரிக்கும் பதினெட்டு மாதங்களில் தவறாது இரண்டு தடவைகள் பெரும் நன்மைகள் கிடைக்கப் பெறும். வரும் வைகாசி மாதம் முதல் ஆடி மாதங்களில், 1919 ஆம் 1920 ஆம் ஆண்டுகளில் இந்த சுப பலன்களை எதிர்பார்க்கலாம். வீடு, வாகன வசதிகள், திருமணப் பேச்சுக்கள், பொருள் வரவு, இன பந்துக்களின் சகாயங்கள், வீட்டில் சுப காரியங்கள் என்பன நடைபெறும். தொழில் விருத்தி, புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு இலக்குகளை அடைலாம். சுப பலன்கள் மிகுதியான காலமாகும்.

ராகு பகவான் மிதுன ராசியில் இருக்க, மிதுனமே லக்கினமானால், அந்தப் பெண்களுக்கு முறையான பரிகாரம் செய்தே திருமணம் முடிக்க வேண்டும்.

தனுசு ராசியில் கேது பகவான்

வியாபார பங்குதாரர்கள் சில விஷயங்களில் விட்டுக் கொடுக்க மறுப்பதால் வியாபாரங்களில் அபிவிருத்தி ஏற்படுவது தள்ளிப் போகும். மனம் உடைந்து பேதங்கள் உருவாகும். மிகவும் சிக்கலான நிலையைச் சமாளிக்க மிகுந்த நிதானமும் பொறுமையும் தேவைப்படும். திருமண வாழ்க்கையும் பல சோதனைகளை எதிர் நோக்கும்.

கேது பகவான் இருக்கும் இடம் மிகவும் பாதிப்புகளைத் தருமாதலால் அவருக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள வீணான சச்சரவுகள், மனக் குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். காலதாமதமாகத்

தடைபட்டிருக்கும் திருமணம் நடைபெறும்.

-கடக ராசி

செல்வ வசதிகள் வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் ஏற்படும். எனினும் ஆனி மாதத்தில் திடீர் சிக்கல்கள் தோன்றவே செய்யும். மறை முக லாபங்கள் சற்று பண முடக்கங்களை தவிர்க் உதவும். குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் வந்து நிற்கும். உறவினர் நண்பர்கள் வீட்டு விவகாரங்களுக்காக அலையவும், செலவுகள் செய்யவும் நேரும். ஆனாலும் உறவுகள் பலப்படும்.

அறிமுகம் அற்ற அந்நியர்களும் உறவுகள் கொண்டாடி வருவதும், உதவிகள் செய்வதும் மன நிம்மதியைத் தரும். ஏற்றத் தாழ்வுடன் வாழ்வு இருந்தாலும் சமநிலையானது பெரிய அளவில் பாதிப்படையாது. அலைச்சல்களும், வீண் விரயங்களுமாக இருக்கின்ற போதிலும் ஒரு சாந்தி நிலவவே செய்யும்.

ஆறாம் ராசிக்குக் கேது பகவானின் மாற்றம் சிறப்பான ஆறுதலையே தரும். கடவுள் வழிபாடு ஆன்மீகத்தில் ஈடுபாடு புனித தலங்களைத் தரிசித்தல் போன்ற தெய்வீக நன்மைகளும் வாய்க்கும். உறவினர்களும் நண்பர்களும் ஒத்துழைப்பாாகள். சமூகத்தில் நற்பெயரும், வரவேற்பும் கிடைக்கும்.

தை மாதங்கள் பல பிரச்சினைகளைக் கொண்டுவரும். நிதானமாக நடந்து பகைவர்களைச் சமாளிப்பதே உத்தமம். வலைந்து கொடுத்து தொல்லைகளை தொலைந்து போகச் செய்வதே நல்லது. மார்கழி மாதத்திலும், மூலம், பூராடம், உத்தராடம் நட்சத்திரம் வரும் காலங்களிலும், பொறுமை காத்தல் நலம் தரும்.

சிம்ம ராசி

ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கே மாறுகிறார். வரும் வைகாசி, ஆனி மாதங்களில் பெருத்த வருமானங்களைப் பெற்றுத் தருவார். ஏராள வரவுகள் கிடைப்பதால், தாராள செலவுகள் செய்து மகிழலாம். சொத்துக்கள், வீடுகள், வாகனங்கள் என்றும் கையை அகலமாகவும் விரிக்கலாம்.

அன்னை இனம் ஆதரவாகச் செயல்படும். மன நிம்மதியை அடையவும், சோர்வை நீக்கி சுகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

நீச லாபங்களும் நிறைய வர சந்தர்ப்பங்கள் உள்ளன. மார்கழி மாதங்களில் அரசாங்கம் உள்ளே புகுந்து இடைஞ்சல்களைத் தரும். கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டுப் பார்க்கும். சமாதானமாக விட்டுவிட்டுவதே நல்லது. களத்திர உதவிகளும், சுகங்களும் அமையும். குழந்தைச் செல்வங்களையும் எதிர்பார்க்கலாம். திருமணம் முடிக்காதவர்களுக்கு மனம் போல் மாங்கல்ய யோகமும் வரும். ஊர்விட்டு ஊர்சென்று தொழில் செய்யச் சந்தர்ப்பங்களும் உண்டாகும். வயிற்று வலி போன்ற உபாதைகளும் இடைக்கிடையே தலை காட்டும்.

ஐந்தாம் ராசிக்குள் நுழையும் கேது பகவானும் நன்மைகளையே செய்வார். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல் வழிபிறக்கும். கோவில்கள், தரிசனங்கள் என்ற ஆன்மீக மார்க்கத்தில் மனம் செல்ல நிம்மதியும் சந்தோஷமும் வீட்டிலும் குடும்பத்திலும் நிலவும். உறவனா்களும், பெற்றோர்களும், நண்பர்களுமாக ஒன்று சேர ஒரே கோலாகலமாக வாழ்க்கை செல்லும்.

கன்னி ராசி

பத்தாம் வீடான மிதுனத்தில் ராகு பகவான் பதினெட்டு மாதங்கள் வாசம் செய்வார். மிதுன ராகு பல நன்மைகளைத் தரத்தக்கவர். அரசாங்க ஆதரவு, தொழில் மேன்கைகளைப் பெற்றுக் கொடுக்க வல்லவரே. ஒவ்வொரு மாதத்திலும்,

மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம் ஆதிய நட்சத்திரங்களில் சந்திரன் வரும் காலங்களிலும், வைகாசி, ஆனி மற்றும் ஆடி மாதங்களிலும் பணவரவு, தொழில் விருத்தி போன்றவைகள் சிறப்பாக அமையும். இக் காலங்களில் முயற்சிகள் செய்தால் வெற்றிகளை இலகுவில் பெறலாம்.

கல்வியில் முன்னேற்றம், நினைத்த காரியங்களைச் சாதித்தல், பெரியோ ர்களை உதவிகளுக்காக அனுகுதல் என்பன சாதகமாக முடியும். ஆனி மாதத்தில் மட்டும் பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

நான்காம் ராசியான தனுசுவில் கேது இயல்பாகவே சில கஷ்ட ங்களைத் தருவார். கேது பகவான் யோகமாக அமையும் ஜாதகங்கள் மிகக் குறைவே. வாகனங்களால் தொல்லைகள், வீடு விற்பது வாங்குவது என்பன நற் பலனைத் தராது.

நஷ்டங்களிலே முடியும். பொறுமையுடன் செயல்படுவதே நல்லது. சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம். ஏனைய கிரக அனுசரனைகளைப் பார்த்தே நற் பலன்களை இறுதி செய்ய முடியும்.

Comments