மூட பழக்க வழக்கங்கள் | தினகரன் வாரமஞ்சரி

மூட பழக்க வழக்கங்கள்

'மூடம்' என்றால் மூடி வைக்கப்பட்ட மறைத்து வைக்கப்பட்ட என்பது பொருள். அந்த காலத்தில் முன்னோர்கள் மக்களை நல்வழிப்படுத்த, பல பழக்கவழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்து வைத்தனர். காரணங்களை சொன்னால் மக்களுக்கு புரியாது. (அந்த காலத்தில்) என்பதற்காக, ஏன், எதற்கு செய்கிறோம் என்ற காரணங்களை வெளிப்படையாக சொல்லாமல் இப்படி செய்தால் நல்லது. செய்யாவிட்டால் குற்றமாகிவிடும் என்று மட்டும் சொல்லி வைத்தனர்.  

உதாரணமாக பெண்கள் பொட்டு வைத்தல், கொண்டை போடுதல், மெட்டி அணிதல், வலது கால் எடுத்து வைத்தல், திருமணத்திற்கு முன் மணமகள், மகன் நலங்கிடுதல், நவராத்திரியில் சுண்டல் விநியோகம், கோவிலில் விளக்கேற்றல், மணி அடித்தல், அபிஷேகம் செய்தல், கிரகன காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது. பண்டிகைகள் கொண்டாடும் முறை... இப்படி பல எல்லாவற்றிற்கும் அறிவியல் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. அந்த காலகட்டத்திற்கு அவை மிகவும் அவசியமானதாகவும் இருந்தன. இந்த காலகட்டத்தில் பல பழக்கவழக்கங்கள் அவசியமானதாக இல்லை. தவிரத்து விடலாம்.. ஆனாலும் காரணம் தெரியாமல் அவற்றை இன்னமும் கடைப்பிடித்து வருகிறோம்.  

பலர் அதை வியாபாரமாகவும் மாற்றிவிட்டனர். தங்கள் சுயநலனுக்கு ஏற்றபடி அவற்றை மாற்றியும் விட்டனர். நாம் உண்மைக் காரணம் தெரியாமல் எல்லாவற்றையும் ஒரு பொழுதுபோக்காக மாற்றிக் கொண்டிருக்கிறோம். முன்னோர்கள் கூறினார்கள் என்பதற்காக அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. அதேசமயம் அவர்கள் கூறியவற்றுள் பயனுள்ளவற்றைக் கடைப்பிடித்தலும் தவறல்ல! வாழ்க வளமுடன்.! 

சோ. வினோஜ்குமார்,
தொழினுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி. 

Comments