பூமியின் வளிமண்டலம் | தினகரன் வாரமஞ்சரி

பூமியின் வளிமண்டலம்

புவியை சூழ்ந்துள்ள வளி மண்டலமானது ஆரம்பத்தில் அதிகளவில் கொண்டிருந்த ஐதரசனை (H2) புவியீர்ப்பின் காரணமாக இழக்கத் தொடங்கியது.

இதேவேளை இவ் ஐதரசனானது. காபனுடனும். ஐதரசனுடனும் இணைந்து மீதேனையும், அமோனியாவையும் உருவாக்கியது. அத்துடன் இதில் காபனீரொட்சைட்டும் தோன்றியது. எவ்வாறாயினும் ஆரம்பகால வளிமண்டலத்தில் நைதரசன் வாய் (N2, CO2, G2O, CH4, NH3, H2) என்பனவே பெருமளவில் காணப்பட்டன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

பூமியின் தோற்றக் காலத்தில் வளி மண்டலம் ஐதரசனைக் கொண்டிருந்ததுடன், புவியானது சமுத்திரங்கள், கண்டங்கள், உயிரினங்கள் எதுவும் அற்ற நிலையில் ஒட்சிசன் இன்றி காணப்பட்டுள்ளது.  

நளீம் லதீப்,
சாய்ந்தமருது  -11.

Comments