தங்கப் பாதை திட்டம்; பிரதமர் இன்று அங்குரார்ப்பணம் | தினகரன் வாரமஞ்சரி

தங்கப் பாதை திட்டம்; பிரதமர் இன்று அங்குரார்ப்பணம்

இதயங்களை ஒன்றிணைக்கும் தங்கப் பாதைத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்து வைக்கின்றார்.

இதனடிப்படையில் 200 புதிய பாதைகள், பாலங்கள் மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளன.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிமின் எண்ணக் கருவில் உருவான இத்திட்டத்தின் கீழ் மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் நாடு பூராகவும் 200 பாதைகளும் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் 9 மணிக்கு மாவனல்லையில் இடம்பெறவுள்ள நிகழ்வின் போது மாவனல்ல, ஹெம்மாதகம, கம்பளை வீதியும் மாவனல்ல – ரம்புக்கணை வீதியும், மாவனல்​ைல அரநாயக்க ஹொரேவெல வீதியும் பிரதமரால் திறந்து வைக்கப்படும்.

அதனையடுத்து முற்பகல் 10.30இற்கு நீர்கொழும்பு கொச்சிக்கடையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தைப் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.

Comments