அரசியலின் கைதிகள் | தினகரன் வாரமஞ்சரி

அரசியலின் கைதிகள்

எத்துணை அற்புதமான வார்த்தை 

‘வீடு திரும்புதல்’ 

தின்னும் மணித்துளிகளில் சிக்கித்திணறி 

செத்துச் செத்துப்பிழைக்கின்றன 

எனது தினங்கள் 

எப்போதாவது ஒரு நாள் 

வீடு செல்லாய் என 

நம்பிக்கை 

வியளம் சொன்னாலும் 

எப்போ எப்போ என 

ஏங்கித் துடிக்கிறதென் இதயம் 

சிரித்துக் கதைத்துக் கொள்கின்றன 

சிறையறைக் கம்பிகள் 

தமிழர்களிடம் எங்களுக்குத் 

தணியாத நேசம் 

பிரிவதற்கு விருப்பமேயில்லை 

என 

மோகனமுகாரி

Comments