உடைந்த கிணறு (சுயசரிதை) | தினகரன் வாரமஞ்சரி

உடைந்த கிணறு (சுயசரிதை)

ஒருநாள் கமல் அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தான். அவ்வழியில் உடைந்த நிலையில் இருந்த கிணறொன்றைக் கண்டான். அப்பொழுது கமல் அந்த கிணற்றைப் பார்க்க ஆசைப்பட்டான். கமல் அந்த கிணற்றுக்கு அருகில் சென்றான். அப்பொழுது கமல் அந்த கிணற்றிடம் "ஏன் இப்படி உடைந்துபோய் இருக்கிறீர்கள்?" என்றான். அப்போது அது தனது சுயசரிதையைக் கூற ஆரம்பித்தது.  

முன்னொரு காலத்தில் நான் பெருமளவு நீரைச் சேமித்து வைத்திருந்தேன். அப்போது நான் வைத்திருந்த நீரை அப்பகுதி மக்கள் எடுத்துச்சென்று தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். திடீரென ஒருநாள் வெளிநாட்டிலிருந்து கிணற்றை பரிசோதிக்க இரண்டு நீர்வள ஆராய்ச்சியாளர்கள் வந்தார்கள்.  

எல்லா ஊர்களிலும் கிணற்றை பரிசோதித்து என் ஊருக்கு வந்தார்கள். நான் மிகவும் பயமாக இருந்தேன். அப்போது என்னைப் பார்க்க வந்தவர்களில் ஒருவன் இந்த கிணற்றைப் பார்க்க அழகாக இருக்கிறது. இந்தக் கிணற்றிலுள்ள நீரை எடுத்து முதலாளியிடம் கொடுப்போம். பணம் கிடைக்கும் என்றான்.

திடீரென மக்களெல்லாம் வந்தார்கள். ஒரு சிறுமி "இந்த ராசியான, அழகான, சுத்தமான கிணற்றை ஏன் பரிசோதிக்கிறீர்கள்"? என கேட்டாள். அப்போது வந்தவர்களில் ஒருவன் இந்த கிணற்றில் பேய் இருக்கிறது. அதனால்தான் ராசியாகவும், அழகாகவும், சுத்தமாகவும் இருக்கிறது என்றான். அதை நம்பிய மக்கள் என்னில் பேய் இருக்கிறதென்று என்னை உடைத்து செங்கற்களையெல்லாம் எடுத்துச் சென்றனர். அதனால்தான் நான் இப்படி உடைந்துபோய் இருக்கிறேன் என்றது. இதனைக் கேட்ட கமல் மிகவும் கவலையுடன் அவனது நண்பனைத்தேடிச் சென்றான்.  

கே. பவிஷிகா,
தரம் 04, இராகலை கி.ஜி.தமிழ் வித்தியாலயம்,
இராகலை.    

Comments